நிதி அமைச்சகம்
1957-ம் ஆண்டின் பங்கு ஒப்பந்தங்கள் (முறைப்படுத்தல்) விதிகளின் 8-வது விதியை பொருளாதார விவகாரங்கள் துறை திருத்தியுள்ளது
प्रविष्टि तिथि:
19 MAY 2025 5:50PM by PIB Chennai
1957-ம் ஆண்டின் பங்கு ஒப்பந்தங்கள் (முறைப்படுத்தல்) விதிகளின் 8-வது விதியை அரசிதழ் அறிவிப்பு ஜிஎஸ்ஆர் 318(இ) மூலம் பொருளாதார விவகாரங்கள் துறை திருத்தியுள்ளது. தரகர்கள் வணிகம் செய்வதை எளிதாக்குவதன் தளத்தை விரிவுபடுத்துவதற்கு தேவையான முறைப்படுத்தல் தெளிவை இந்தத் திருத்தம் வழங்குகிறது.
சம்பந்தப்பட்ட விதிகளில் சில அம்சங்கள் பற்றி பல்வேறு பங்குதாரர்கள் கவலை தெரிவித்ததைக் கருத்தில் கொண்டு பொருளாதார விவகாரங்கள் துறை 2024 செப்டம்பரில் ஆலோசனை ஆவணம் ஒன்றை பொது மக்கள் கருத்தறிவதற்காக வெளியிட்டது.
பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட பின்னூட்டங்களை உரியமுறையில் பரிசீலித்த பின் இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒழுங்குமுறை தெளிவை வழங்குவதற்கும், நிதித்துறையில் வணிகம் செய்வதை எளிதாக்குவதை விரிவுபடுத்துவதற்கும் அரசு அளிக்கும் முக்கியத்துவத்தின் ஒரு பகுதியாக இது உள்ளது. இந்தியாவின் மூலதனச் சந்தைகளை வெளிப்படையாகவும், நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட வகையிலும் மேம்படுத்துவதற்கு சந்தை பங்குதாரர்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்பதை இது உறுதிசெய்யும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2129667
***
TS/SMB/AG/DL
(रिलीज़ आईडी: 2129712)
आगंतुक पटल : 7