விவசாயத்துறை அமைச்சகம்
வரவிருக்கும் ‘வளர்ச்சியடைந்த வேளாண் சங்கல்ப இயக்கம்’ குறித்து மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் காணொலி காட்சி மூலம் மாநில வேளாண் அமைச்சர்களுடன் கலந்துரையாடினார்
Posted On:
19 MAY 2025 5:38PM by PIB Chennai
வரவிருக்கும் ‘வளர்ச்சியடைந்த வேளாண் சங்கல்ப இயக்கம்’ குறித்த தயாரிப்பு பணிகள் பற்றி விவாதிக்க மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன், ஊரக மேம்பாட்டு அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் இன்று புதுதில்லியில் உள்ள கிரிஷிபவனில் இருந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வேளாண் அமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். இந்த இயக்கம் 2025 மே 29 முதல் ஜூன் 12 வரை நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. இந்த இயக்கத்தில் மாநிலங்கள் தீவிரமாகப் பங்கேற்க வேண்டுமென்று வலியுறுத்திய அமைச்சர், வேளாண் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவுகளிலிருந்து விவசாயிகள் பயனடைவதை உறுதிசெய்யும் வகையில் அவர்களைச் சென்றடைவது இதன் இலக்காக இருக்க வேண்டும் என்றார்.
வேளாண் உற்பத்தி திறனை அதிகரிப்பதை நோக்கிய குறிப்பிடத்தக்க நடவடிக்கை இது என்று குறிப்பிட்ட திரு சௌகான், இது இந்திய வேளாண்மையில் மாற்றத்தை ஏற்படுத்தும் மிகப்பெரிய முன்முயற்சி என்றார். வேளாண்மையை லாபம் அடைவதாக மாற்றுவதும், உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்வதும், உணவு தானியங்கள், பயறு வகைகள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிப்பதும், அனைத்து குடிமக்களுக்கும் சத்தான உணவு கிடைக்கச்செய்வதும் இதன் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள கிராமங்களுக்கு விஞ்ஞானிகளைக் கொண்ட 2170 குழுக்கள் பயணம் செய்யும் என்றும் இவை விவசாயிகளுக்கு நேரடியாகப் பயிற்சி அளிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இந்த விஞ்ஞானிகள் ஆராய்ச்சி பற்றியும், தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துரைப்பார்கள்.
இந்த நிகழ்வில் வேளாண் அமைச்சக செயலாளர் திரு தேவேஷ் சதுர்வேதி, ஐசிஏஆர் தலைமை இயக்குநர் டாக்டர் எம் எல் ஜாட் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2129663
***
TS/SMB/AG/DL
(Release ID: 2129709)