தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

ஜார்க்கண்ட் மாநில வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சித் திட்டத்தை தேர்தல் ஆணையம் தொடங்கியது

Posted On: 19 MAY 2025 2:39PM by PIB Chennai

ஜார்க்கண்டில் இருந்து முன்னணி தேர்தல் அதிகாரிகளுக்கான இரண்டு நாள் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமார் இன்று புதுதில்லியில் உள்ள இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனத்தில்  தொடங்கி வைத்தார். பங்கேற்பாளர்களில் 402 பேர் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், வாக்குச்சாவடி அளவிலான அதிகாரிகள் மற்றும்  மேற்பார்வையாளர்கள் அடங்குவர். கடந்த மூன்று மாதங்களில், நாடு முழுவதிலுமிருந்து 3000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம்  பயிற்சி அளித்துள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர்  தமது தொடக்க உரையில், வாக்காளர் சேர்க்கையின் போது ஜார்க்கண்டில் கீழ்மட்டத்தில் பங்கேற்பாளர்கள் காட்டிய முன்மாதிரியான கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டினார். 1950 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவுகள் 24(a) மற்றும் 24(b) இன் கீழ் முதல் மற்றும் இரண்டாவது மேல்முறையீடுகளின் விதிகள் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு பங்கேற்பாளர்களைத் தலைமைத் தேர்தல் ஆணையர் வலியுறுத்தினார்.

இறுதி வாக்காளர் பட்டியல்களுக்கு எதிரான முதல் மற்றும் இரண்டாவது மேல்முறையீடுகளை முறையே மாவட்ட ஆட்சியர்/மாவட்ட நிர்வாக மாஜிஸ்திரேட் மற்றும் மாநில/யூனியன் பிரதேசத்தின் தலைமை தேர்தல் அதிகாரி  ஆகியோரிடம் தாக்கல் செய்யலாம் என்பதை நினைவூட்டினார்.  சிறப்பு சுருக்க திருத்தம்  பயிற்சி ஜனவரி 6-10, 2025 வரை முடிந்த பிறகு ஜார்க்கண்டிலிருந்து எந்த மேல்முறையீடுகளும் தாக்கல் செய்யப்படவில்லை.

சரியான மற்றும் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பயிற்சி திட்டத்தில் பங்கேற்று உள்ள அலுவலர்கள்  மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950, 1951, வாக்காளர் பதிவு விதிகள் 1960, தேர்தல் நடத்தை விதிகள் 1961 மற்றும் அவ்வப்போது தேர்தல் ஆணையத்தால்  வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களின்படி கண்டிப்பாக செயல்பட பயிற்சி அளிக்கப்படுகிறார்கள். பயிற்சி பெறுபவர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் பற்றிய தொழில்நுட்ப செயல் விளக்கங்கள் மற்றும் பயிற்சியும் வழங்கப்படுகிறது. இதில் மாதிரி வாக்குப்பதிவு நடத்துவதும் அடங்கும்.

***

(Release ID: 2129594)
TS/PKV/RR/KR

 


(Release ID: 2129619)
Read this release in: Odia , English , Urdu , Hindi