பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மூத்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கான, தனிப்பட்ட அதிகாரம் கொண்ட இயக்குநர் தொடர்பான இரண்டாவது சான்றிதழ் பயிற்சி வகுப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது

Posted On: 17 MAY 2025 9:36AM by PIB Chennai

இந்திய கம்பெனி விவகாரங்கள் நிறுவனம் (IICA-ஐஐசிஏ), பொது மீள்குடியேற்ற இயக்குநரகத்துடன் (DGR-டிஜிஆர்) இணைந்து மூத்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கான இரண்டாவது பயிற்சித் திட்டத்தை 2025 மே 5 முதல் 2025 மே 16 வரை குருகிராமின் மானேசரில் உள்ள ஐஐசிஏ வளாகத்தில் நடத்தியது.

இந்த இரண்டு வார சான்றிதழ் பயிற்சி நிகழ்ச்சியில் ஏர் மார்ஷல்கள், வைஸ் அட்மிரல்கள், ரியர் அட்மிரல்கள், ஏர் வைஸ் மார்ஷல்கள், மேஜர் ஜெனரல்கள், பிரிகேடியர்கள், கர்னல்கள், குழு கேப்டன்கள் ஆகிய பொறுப்புகளில் உள்ள, பாதுகாப்புத் துறையின் மூன்று சேவைகளையும் சேர்ந்த 30 மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இறுதி அமர்வுக்கு ஐஐசிஏ-வின் தலைமைச் செயல் அதிகாரி திரு ஞானேஷ்வர் குமார் சிங் தலைமை தாங்கினார்.  இந்திய நிறுவனங்களின் சூழலியலில் வீரர்கள் வகிக்கக் கூடிய பொறுப்புகள் குறித்துப் பேசினார். ஆயுதப்படையினரின் திறன்களும் அனுபவங்களும் பிற துறைகளில் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், அது வளர்ச்சி அடைந்த பாரதத்தை அடைய வழிவகுக்கும் என்றும் திரு சிங் தெரிவித்தார்.

இந்த இரண்டு வாரப் பயிற்சி பின்வரும் நோக்கங்களுடன் வடிவமைக்கப்பட்டது:

(i) கார்ப்பரேட் ஆளுகை குறித்த கருத்தியல், ஒழுங்குமுறை புரிதலை பங்கேற்பாளர்களுக்கு வழங்குவது;

(ii) தனிப்பட்ட அதிகாரம் கொண்ட இயக்குநரின் பொறுப்புகள்

(iii) கார்ப்பரேட் வாரியங்களுக்கு பங்களிக்க அவர்களுக்கு உதவுதல்

நல்ல நிர்வாகத்தையும் பொறுப்பான வணிக நடைமுறைகளையும் ஊக்குவிக்கும் முயற்சிகளை ஐஐசிஏ நிறுவனம் தொடர்ந்து ஊக்குவிக்கிறது.

***

TS/PLM/DL


(Release ID: 2129284)
Read this release in: English , Urdu , Hindi , Marathi