கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால் திப்ருகர் மற்றும் தின்சுகியாவில் 'திரங்கா யாத்திரை'க்கு தலைமை தாங்கினார்; பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான 'தீர்க்கமான மற்றும் மகத்தான வெற்றி' என்று ஆபரேஷன் சிந்தூரை பாராட்டினார்
Posted On:
16 MAY 2025 6:45PM by PIB Chennai
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால், திப்ருகரில் உள்ள சௌகிடிங்கியிலும், தின்சுகியாவில் உள்ள மானவ் கல்யாணிலும் ஆபரேஷன் சிந்தூரின் அசாதாரண வெற்றியைக் கௌரவிக்கும் வகையில் நடைபெற்ற திரங்கா யாத்திரையில் பங்கேற்றார். இந்த நிகழ்வு, இந்திய ஆயுதப்படைகள் மற்றும் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் துணிச்சலான, சிறப்பு மிக்க விளைவுகளை வழங்கிய பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையின் போது அவரது தீர்க்கமான தலைமைக்கு மரியாதை மற்றும் நன்றியைத் தெரிவிக்கும் அடையாளமாகும்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால், “சிந்தூர் நடவடிக்கையின் முன்னெப்போதும் இல்லாத வெற்றி, நமது ஆயுதப் படைகளின் வீரம், வலிமை மற்றும் அசாத்திய துணிச்சலுக்கு ஒரு சான்றாகும். நமது திறமைகள் மீண்டும் ஒருமுறை பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாத மையங்கள் மீது தீர்க்கமான மற்றும் மகத்தான வெற்றியை உறுதி செய்துள்ளன. மேலும், பயங்கரவாதிகளுக்கும் அவர்களைப் பாதுகாக்கும் பாகிஸ்தானுக்கும் இது ஒரு கண்டிப்பான செய்தியை அனுப்புகிறது - இந்தியா எந்தவொரு பயங்கரவாத அச்சுறுத்தலையும் அல்லது செயலையும் பொறுத்துக்கொள்ளாது, மேலும் ஏதேனும் தவறு நடந்தால் விரைவான பதிலடியைப் பெறும். பிரதமர் திரு. நரேந்திர மோடியின் வலுவான மற்றும் துணிச்சலான தலைமை, இது ஒரு புதிய இந்தியா என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது - நாட்டிற்கு எதிரான எந்தவொரு சதித்திட்டத்திற்கும் வலிமையுடனும் துல்லியத்துடனும் பதிலளிக்கும் திறன் கொண்டது.”
"திப்ருகர் மற்றும் தின்சுகியா ஆகிய இரு இடங்களிலும் இன்று நடைபெற்ற 'திரங்கா யாத்திரை'யில் ஏராளமான மக்களுடன் இணைந்து கலந்து கொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத மையங்களை முழுமையாகவும் வெற்றிகரமாகவும் தாக்கி செயலிழக்க செய்ததற்கும், பாகிஸ்தானின் தீய திட்டத்திற்கு மகத்தான பதிலடி கொடுத்ததற்கும் ஆயுதப் படைகளுக்கு எங்கள் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வது நம் அனைவருக்கும் உத்வேகம் மற்றும் அர்ப்பணிப்புக்கான தருணம். பிரதமர் திரு. மோடியின் திறமையான தலைமையின் கீழ், ஒவ்வொரு ஆக்கிரமிப்புச் செயலுக்கும் தகுந்த பதிலடி கொடுக்கும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது."
பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், திரங்கா யாத்திரை, தேசிய ஒற்றுமை மற்றும் பெருமையின் வலுவான அடையாளமாக - குறிப்பாக ஆபரேஷன் சிந்தூரின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து - மாறியுள்ளது. இந்தியா தனது ஆயுதப் படைகளின் துணிச்சலையும், பயங்கரவாதம் மற்றும் அதன் ஆதரவாளர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட உறுதியான நிலைப்பாட்டையும் கொண்டாடும் வேளையில், இந்த யாத்திரை மூவர்ணக் கொடிக்கு கௌரவம் சேர்ப்பதாக அமைகிறது. இந்தப் புதுப்பிக்கப்பட்ட தேசபக்தி அலை 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற உணர்வலைகளைத் தொடர்ந்து தூண்டுகிறது.
திப்ருகரில் நடந்த யாத்திரையில், பல்வேறு சமூகங்களின் மக்களிடமிருந்து உற்சாகமான பங்கேற்பு காணப்பட்டது. இந்த நிகழ்வின் போது, சட்டமன்ற உறுப்பினர்கள் தேராஷ் கோவாலா மற்றும் தரங்கா கோகோய்; அஸ்ஸாம் சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்தின் (ATDC) தலைவர் ரிதுபர்ணா பருவா; அஸ்ஸாம் பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் (APL) தலைவர் மற்றும் அசாம் பாஜக செயலாளர் பிகுல் தேகா; அஸ்ஸாம் மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஹேமபிரபா பர்தாகூர்; திப்ருகர் மாவட்ட பாஜக தலைவர் துலால் போரா; திப்ருகர் நகராட்சி மேயர் சைகத் பத்ரா; துணை மேயர் உஜ்ஜால் புகான்; திப்ருகர் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் அசிம் ஹசாரிகா; அசாம் ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளர் லக்ஷ்யா கொன்வர்; மற்றும் திப்ருகர் மாவட்ட மகிளா மோர்ச்சா தலைவர் மாமுன் கோகோய் மித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
***
SM/ DL
(Release ID: 2129236)