பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறை தீர்வு துறை ஏப்ரல் மாதத்திற்கான 33வது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
Posted On:
16 MAY 2025 5:21PM by PIB Chennai
மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறை தீர்வு துறை, ஏப்ரல் மாதத்திற்கான மையப்படுத்தப்பட்ட பொது குறைகள் தீர்வு மற்றும் கண்காணிப்பு அமைப்பு (CPGRAMS) 33வது மாதாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது.
CPGRAMS தளத்தில் ஏப்ரல் மாதத்திற்கான மாநிலங்கள்/யூனியன் பிரதேச அரசுகள் 2,08,103 குறைகளை நிலுவையில் வைத்துள்ளன.
ஏப்ரல் 2025 மாதத்திற்கு மொத்தம் 62,227 புதிய பயனர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர், அதிகபட்ச பதிவுகள் உத்தரப் பிரதேசத்திலிருந்து (9,327) செய்யப்பட்டுள்ளன. CPGRAMS பொது சேவை மைய தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2025 -ல் உத்தரப் பிரதேசம் அதிக எண்ணிக்கையிலான குறைகளைப் பெற்றுள்ளது, 25,863 ஆக உள்ளது, உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் 2025 ஏப்ரலில் அதிகபட்ச குறைகளை முறையே 22,834 மற்றும் 3,624 குறைகளை தீர்த்து வைத்தன, . ஏப்ரல் 1 முதல் 30 வரை 16 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் 1000 க்கும் மேற்பட்ட குறைகளைத் தீர்த்துள்ளன,
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2129109
****
(Release ID: 2129109)
SM/PKV/SG
(Release ID: 2129150)