கலாசாரத்துறை அமைச்சகம்
டபிள்யுஎம்எஃப்ஐ, டிசிஎஸ் அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தால் ராஜோன் கி பவோலி மீட்டெடுக்கப்பட்டுள்ளது
Posted On:
16 MAY 2025 5:42PM by PIB Chennai
இந்தியாவின் கலாச்சார, சுற்றுச்சூழல் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, இந்திய தொல்பொருள் ஆய்வு மையம், இந்தியாவுக்கான உலக நினைவுச்சின்ன நிதியமான டபிள்யுஎம்எஃப்ஐ, டிசிஎஸ் அறக்கட்டளை ஆகியவை இணைந்து, புதுதில்லியின் மெஹ்ராலி தொல்பொருள் பூங்காவில் அமைந்துள்ள 16-ம் நூற்றாண்டின் படிகள் அமைக்கப்பட்டுள்ள பெரும் கிணறான ராஜோன் கி பவோலியின் பாதுகாப்புப் பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளது.
இந்தத் திட்டம் டபிள்யுஎம்எஃப்ஐ-ன் வரலாற்று நீர்நிலைகள் பாதுகாப்பு முயற்சியின் ஒரு பகுதியாகும். இது டிசிஎஸ் அறக்கட்டளை இதற்கு நிதி அளித்துள்ளது. இது உலக நினைவுச்சின்ன நிதியத்தின் பருவநிலை பாரம்பரிய முன்முயற்சியின் ஒரு பகுதியாகும்.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் நீர் மேலாண்மைக்கான நிலையான தீர்வுகளாக பாரம்பரிய நீர்நிலைகளை மீட்டெடுப்பதன் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது.
இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை மேற்பார்வையின் கீழ், பாரம்பரிய பொருட்கள் மற்றும் நுட்பங்களைப் பயன்படுத்தி சுத்தம் செய்தல், தூர்வாருதல், கட்டமைப்பு பழுதுபார்ப்பு மற்றும் நீர் தர மேம்பாடுகள் ஆகியவை மறுசீரமைப்புப் பணிகளில் அடங்கும்.
பவோலி சுத்தம் செய்யப்பட்டு, வண்டல் நீக்கப்பட்டு, சரியான வடிகால் அமைப்புகளுடன் இணைக்கப்பட்டது. நீரின் தரத்தை பராமரிக்க கிணற்றில் மீன்கள் விடப்பட்டுள்ளன. கட்டமைப்பின் அசல் தன்மையைப் பாதுகாக்க சுண்ணாம்பு பூச்சு மற்றும் சாந்து கலவை போன்ற பாரம்பரிய பொருட்கள் பயன்படுத்தப்பட்டன.
மறுசீரமைப்புடன் கூடுதலாக, பவோலியின் கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் மதிப்பு குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை மற்றும் அதன் சார்பு நிறுவனங்கள் உள்ளூர் சமூகங்களை ஈடுபடுத்தின.
லோடி வம்சத்தின் போது 1506-ம் ஆண்டில் கட்டப்பட்ட ராஜோன் கி பவோலி, லோடி-சகாப்த கட்டிடக்கலை மற்றும் பாரம்பரிய நீர் பொறியியலுக்கு ஒரு சான்றாக அமைகிறது. இந்த நான்கு அடுக்கு படிக்கிணறு தண்ணீரைச் சேமிப்பதற்காக மட்டுமல்லாமல், பயணிகளுக்கு நிழலையும் ஓய்வையும் வழங்குவதற்காக சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் நேர்த்தியான வளைந்த தூண்கள், மலர் மற்றும் அழகியல் வடிவங்களுடன் நேர்த்தியாக செதுக்கப்பட்ட கல் கூறுகள் அந்தக் காலத்தின் கலை நுட்பத்தை பிரதிபலிக்கின்றன. 1,610 சதுர மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த பவோலி, 13.4 மீட்டர் ஆழம் கொண்டது.
***
(Release ID: 2129120)
SM/PLM/RR/SG
(Release ID: 2129147)