பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறை தீர்ப்புத் துறை, ஏப்ரல் 2025-க்கான மத்திய அமைச்சகங்கள்/துறைகளின் செயல்திறன் குறித்த 36வது மாதாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது
Posted On:
16 MAY 2025 5:23PM by PIB Chennai
நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறை தீர்ப்புத் துறை, ஏப்ரல் 2025-க்கான மையப்படுத்தப்பட்ட பொது மக்கள் குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பான சிபிஜிஆர்ஏஎம்எஸ்-சின் (CPGRAMS) மாதாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது பொதுமக்கள் குறைகளின் வகைகள், அவற்றுக்கான தீர்வுகளின் தன்மை ஆகியவை பற்றிய விரிவான பகுப்பாய்வை வழங்குகிறது. இது இத்துறையால் வெளியிடப்பட்ட மத்திய அமைச்சகங்கள்/துறைகள் குறித்த 36-வது அறிக்கையாகும்.
ஏப்ரல் 2025-ல், மத்திய அமைச்சகங்கள்/துறைகளால் 1,25,027 குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன. 2025 ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 30, 2025 வரை மத்திய அமைச்சகங்கள்/துறைகளில் சராசரி குறை தீர்ப்புக்கான கால அளவு 16 நாட்கள் ஆகும். ஏப்ரல் 2025-ல் சிபிஜிஆர்ஏஎம்எஸ் தளம் மூலம் பதிவுசெய்த புதிய பயனர்கள் மொத்தம் 62,227 ஆகும். அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்திலிருந்து 9,327 பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.
ஏப்ரல் 2025-ல் பொது சேவை மையங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட குறைகள் குறித்த பகுப்பாய்வையும் இந்த அறிக்கை வழங்குகிறது. ஏப்ரல் 2025 மாதத்தில் பொது சேவை மையங்கள் மூலம் 5,004 குறைகள் பதிவு செய்யப்பட்டன. ஏப்ரல் 2025-க்கான குறை தீர்க்கும் மதிப்பீட்டு குறியீட்டில் அஞ்சல் துறை, தொலைத்தொடர்புத் துறை, வேளாண் துறை ஆகியவை சிறந்த செயல்திறன் கொண்டவையாக உள்ளன.
***
(Release ID: 2129111)
SM/PLM/RR/SG
(Release ID: 2129142)