சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
உலகளாவிய அணுகல் விழிப்புணர்வு தினமான இன்று, புதுதில்லியில் ‘உள்ளடக்கிய இந்தியா உச்சிமாநாட்டை’ மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை நடத்தியது
प्रविष्टि तिथि:
15 MAY 2025 6:12PM by PIB Chennai
உலகளாவிய அணுகல் விழிப்புணர்வு தினத்தையொட்டி, 2025 மே 15, அன்று புதுதில்லியில் உள்ள இந்திய சர்வதேச மையத்தில் உள்ளடக்கிய இந்தியா உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்வு, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை, எஸ்பிஐ அறக்கட்டளை மற்றும் தில்லியின் தேசிய பார்வையற்றோர் சங்கம் ஆகியோரால் இணைந்து நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு பேசிய மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால், மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையில் அணுகல் மற்றும் உள்ளடக்கத்தை உறுதி செய்வது அரசின் பொறுப்பு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டுக் கடமையாகும் என்று குறிப்பிட்டார். வாழ்க்கையின் மூன்று முக்கிய அம்சங்களான வாழ்க்கை, கற்றல் மற்றும் வாழ்வாதாரம் குறித்து எடுத்துரைத்த அவர், ஒவ்வொரு மாற்றுத்திறனாளிக்கும் கண்ணியமான வாழ்க்கையை வாழ உரிமை உண்டு என்று கூறினார். அவர்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்குவதில் தொழில்நுட்பத்தின் மாற்றத்தக்க பங்கை அவர் சுட்டிக் காட்டினார். மேலும் அதை இன்னும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்தார். கல்வி என்பது ஒவ்வொரு குழந்தையின் உரிமை என்றும், மாற்றுத்திறனாளி குழந்தைகள் பாகுபாடு இல்லாமல் பிரதான கல்வியை அணுக உதவும் உள்ளடக்கிய உள்கட்டமைப்பை நாம் உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மாற்றுத்திறனாளிகளை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றுவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். மாற்றுத்திறனாளிகள் பலர் பல்வேறு துறைகளில் வெற்றிக்கு முன்மாதிரியாக உள்ளனர். மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர்கள் அவர்களை நம்பி அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2128888
***
SM/IR/AG/ RJ
(रिलीज़ आईडी: 2128901)
आगंतुक पटल : 13