அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இந்தியா வளர்ந்து வரும் உலகளாவிய உயிரி தொழில்நுட்ப மையம் என டாக்டர் ஜிதேந்திர சிங் வர்ணனை
Posted On:
14 MAY 2025 5:28PM by PIB Chennai
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், புதுதில்லியில் நடைபெற்ற சர்வதேச மரபணு பொறியியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப மையத்தின் ஆளுநர்களின் 31-வது வாரியக் கூட்டத்தில், இந்தியாவின் முதல் பொது நிதியுதவியுடன் கூடிய 'பயோ-ஃபவுண்டரி'யை தொடங்கி வைத்தார்.
இந்தக் கூட்டத்தில் உலகின் 60-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், இந்தியா வளர்ந்து வரும் உலகளாவிய உயிரி தொழில்நுட்ப மையம் என்று விவரித்தார். மேலும், உலக சமூகத்திற்கு இந்தியா நிறைய பங்களிக்க வேண்டிய நேரத்தில் இதுபோன்ற விவாதங்களுக்கு இது மிகவும் பொருத்தமான இடம் என்றும் அவர் கூறினார்.
1983 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சர்வதேச மரபணு பொறியியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப மையம், உயிரி அறிவியலில் ஆராய்ச்சியை முன்னேற்றுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முதன்மையான அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும். இந்தியா இந்த மையத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒன்றாகும். இந்த அமைப்பு, இந்தியா, இத்தாலி, தென்னாப்பிரிக்கா ஆகியநாடுகளில் உள்ள மூன்று முக்கிய மையங்கள் வழியாக செயல்படுகிறது.
69 உறுப்பினர் நாடுகளைக் கொண்டுள்ள இந்தமையம், ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் மூலம் உயிரி தொழில்நுட்பம் தலைமையிலான நிலையான உலகளாவிய வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2128674
***
SM/PKV/AG/DL
(Release ID: 2128723)