அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அறிவியியல் மற்றும் தொழில்நுட்பத்துறை & பாதுகாப்பு ஆராயச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆகியவை இணைந்து அடிப்படை நிலையிலான விண்வெளி சூழல் குறித்த விழிப்புணர்வை வலுப்படுத்தும் நடவடிக்கைகள்
प्रविष्टि तिथि:
14 MAY 2025 6:01PM by PIB Chennai
ஆர்யபட்டா ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு நிறுவனத்தில் உள்ள கண்காணிப்பு வசதிகளைப் பயன்படுத்தி, விண்வெளி ஆய்வில் அதன் அறிவியல் நிபுணத்துவத்தின் உதவியுடன், அடிப்படை நிலையிலான விண்வெளி சூழல் தொடர்பான விழிப்புணர்வில் இந்தியாவின் திறன்களை வலுப்படுத்த, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புடன் இணைந்து செயல்படுவதற்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
மே 13, 2025 - தேதி டேராடூனில் உள்ள ஐஆர்டிஇ நிறுவன வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நைனிடாலில் உள்ள தன்னாட்சி நிறுவனமான ஆர்யபட்டா ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு நிறுவனம், டேராடூனில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மற்றும் கருவிகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஆய்வகம், ஆர்யபட்டா ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் மணீஷ் குமார் நஜா, கருவிகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் அஜய் குமார் ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
வானியல், வான் இயற்பியல் மற்றும் வளிமண்டல அறிவியல் துறையில் ஆர்யபட்டா ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு நிறுவனம், ஒரு முதன்மையான ஆராய்ச்சி நிறுவனமாகும். மேலும் 3.6 மீ தேவஸ்தல் ஆப்டிகல் தொலைநோக்கி மற்றும் ஸ்ட்ராடோஸ்பியர் ட்ரோபோஸ்பியர் ரேடார் எனப்படும் தொலையுணர்வு அமைப்பு உள்ளிட்ட அதிநவீன தேசிய கண்காணிப்பு வசதிகளை வழங்குகிறது.
ஐஆர்டிஇ நிறுவனம் தரை, கடற்படை, வான்வழி மற்றும் விண்வெளி தளங்களில் ஆயுதப்படைகளுக்கான எலக்ட்ரோ-ஆப்டிகல் கண்காணிப்பு அமைப்புகளின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டில் ஈடுபட்டுள்ள ஒரு முன்னணி நிறுவனமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2128692
***
SM/SV/AG/DL
(रिलीज़ आईडी: 2128721)
आगंतुक पटल : 8