தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
பாரத் 6G 2025’-3வது சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சியில் மத்திய தகவல் தொடர்புத்துறை இணையமைச்சர் டாக்டர் சந்திர சேகர் பெம்மாசானி உரையாற்றினார்
Posted On:
14 MAY 2025 2:33PM by PIB Chennai
அடுத்த தலைமுறை 6ஜி தொழில்நுட்பங்களின் வளர்ச்சியில் உலகளவில் தலைமை தாங்குவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மத்திய தகவல் தொடர்பு மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் டாக்டர் சந்திர சேகர் பெம்மாசானி இன்று வலியுறுத்தினார். புது தில்லியில் நடைபெற்ற ‘பாரத் 6ஜி 2025’-3வது சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சியில் உரையாற்றிய அவர், தொழில்நுட்பத்தை அணுகுபவர் என்ற நிலையிலிருந்து தரநிலையை அமைப்பவராக நாடு மாறியிருப்பது குறித்து எடுத்துரைத்தார், மேலும் பாரத் 6ஜி-யை ஒரு தொழில்நுட்ப நோக்கமாக மட்டுமல்லாமல் ஒரு தேசிய இயக்கமாகவும் கருதுமாறு அனைத்து பங்குதாரர்களையும் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வு, ஆறாவது தலைமுறை (6ஜி) தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னோடியாக மாறுவதற்கான வழிவகையில் இணைவதற்கு உலகளாவிய தொழில்நுட்பத் தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை ஒன்றிணைத்தது.
எதிர்கால சந்ததியினருக்கான இணைப்பை மறுவரையறை செய்யக்கூடிய ஒரு மாற்றத்தக்க வாய்ப்பாக 6ஜி-யை அமைச்சர் விவரித்தார். மேலும் சுகாதாரம், கல்வி, மற்றும் நவீன நகரங்கள் போன்ற துறைகளில் புரட்சியை ஏற்படுத்தக் கூடிய அதன் திறனை சுட்டிக் காட்டினார்.
2023 மார்ச் 23 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட பாரத் 6ஜி தொலைநோக்கு, 2030-ம் ஆண்டுக்குள் 6ஜி தொழில்நுட்பங்களை வடிவமைக்க, மேம்படுத்த மற்றும் பயன்படுத்த இந்தியாவுக்கு ஒரு லட்சிய பாதையை வகுக்கிறது என்று டாக்டர் பெம்மாசானி குறிப்பிட்டார். பாரத் 6ஜி கூட்டணி, 111+ நிதியளிக்கப்பட்ட ஆராய்ச்சி திட்டங்கள், ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஃபின்லாந்துடனான உலகளாவிய கூட்டாண்மைகள் மற்றும் டெராஹெர்ட்ஸ் தொடர்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு- சுய கட்டமைப்புகளில் முன்னேற்றங்கள் மூலம் 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவை உலகளாவிய 6ஜி தலைமைத்துவமாக திகழச் செய்வதே பாரத் 6ஜி தொலைநோக்கின் நோக்கமாகும் என்று அவர் கூறினார்.
***
(Release ID: 2128597)
SM/IR/RR
(Release ID: 2128618)