பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எத்தியோப்பியாவைச் சேர்ந்த ஆளுநர்கள், துணை ஆளுநர்கள் மற்றும் மூத்த அமைச்சர்கள் அடங்கிய உயர்மட்டக் குழு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்தது.

Posted On: 12 MAY 2025 5:11PM by PIB Chennai

இந்தியாவிற்கு தற்போது வருகை தந்துள்ள எத்தியோப்பியாவைச் சேர்ந்த ஆளுநர்கள், துணை ஆளுநர்கள் மற்றும் அமைச்சர்கள் அடங்கிய உயர்மட்டக் குழு, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங்கை இன்று சந்தித்தது.

 

இந்தியாவுடனான எத்தியோப்பியாவின் ஒற்றுமை மற்றும் நீடித்த ஒத்துழைப்பை பிரதிநிதிகள் குழு மீண்டும் வலியுறுத்தியது.

இங்கு தங்கியிருக்கும் போது, தேசிய நல்லாட்சி மையத்தில்  ஒரு வார கால பயிற்சித் திட்டத்தை இந்தக் குழுவின் உறுப்பினர்கள் மேற்கொள்வார்கள்.

வெளியுறவு அமைச்சகத்தின் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு பிரிவின் கீழ் தேசிய நல்லாட்சி மையத்தால்  ஏற்பாடு செய்யப்பட்ட இந்தத் திறன் மேம்பாட்டுத் திட்டம், மூத்த எத்தியோப்பிய கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் நிர்வாகத் தலைவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மாறும் உலகளாவிய சூழலில்  பயனுள்ள கொள்கை உருவாக்கம் மற்றும் நிர்வாகத்திற்கான உத்திசார் நுண்ணறிவுகள், சிறந்த நடைமுறைகள் மற்றும் செயல்படக்கூடிய அறிவுடன் அவர்களைத் தயார்ப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

 எத்தியோப்பிய தூதுக்குழு இந்தியா மீது  காட்டிய அசைக்க முடியாத ஒற்றுமையை ஜிதேந்திர சிங் பாராட்டினார். வலுவான இருதரப்பு உறவுகளை வளர்ப்பதற்கும் நல்லாட்சி மற்றும் ஒத்துழைப்பின் பகிரப்பட்ட மதிப்புகளை ஊக்குவிப்பதற்கும் அவர்களின் அர்ப்பணிப்பை அங்கீகரித்து, திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தீவிர பங்கேற்புக்காக ஆளுநர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளை அவர் பாராட்டினார்.

 

பிரதமர் நரேந்திர மோடிக்கும் எத்தியோப்பிய பிரதமர் அபி அகமதுவுக்கும்  இடையிலான சமீபத்திய சந்திப்பை அவர் நினைவு கூர்ந்தார். ஆகஸ்ட் 2023 இல் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது அபி அகமது, வளர்ச்சி கூட்டாண்மை, தகவல் தொழில்நுட்பம், விவசாயம், இளைஞர் திறன் மேம்பாடு மற்றும் மக்களிடையே பரிமாற்றம் போன்ற துறைகளில் வளர்ந்து வரும் இருதரப்பு ஒத்துழைப்பை வலியுறுத்தினார்.

 

இந்தோ-எத்தியோப்பிய உறவுகளின் வரலாற்று உறவின் ஆழத்தை எடுத்துரைத்த டாக்டர் சிங், சுதந்திரத்திற்குப் பிறகு எத்தியோப்பியாவில் ஒரு தூதரக சேவையை நிறுவிய முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று கூறினார். பிரதமர் மோடியின் "விஸ்வ பந்து" (உலகின் நண்பன்) என்ற தொலைநோக்கை அவர் சுட்டிக் காட்டினார். பரஸ்பர வளர்ச்சிக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

 

இந்தியாவிற்கான எத்தியோப்பிய தூதரகத்தின் துணைத் தலைவர் தூதர் மொலாலின் அஸ்ஃபாவ்; எத்தியோப்பியா கூட்டமைப்பு சபையின் துணைத் தலைவர் சஹ்ரா ஹூமேத் அலி ஆகியோர் தூதுக்குழுவை வழிநடத்தி, இந்தியாவின் விருந்தோம்பல், நிறுவன அறிவு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான அர்ப்பணிப்புக்கு மனமார்ந்த  பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

 

வங்கதேசம், கென்யா, தான்சானியா, துனிசியா, சீஷெல்ஸ், இலங்கை, ஆப்கானிஸ்தான், லாவோஸ், மாலத்தீவுகள், வியட்நாம், பூட்டான், மியான்மர், கம்போடியா, நேபாளம், காம்பியா, எரித்திரியா மற்றும் எத்தியோப்பியா உள்ளிட்ட 47 நாடுகளைச் சேர்ந்த 5000-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் இந்த மையத்தில் பயிற்சி பெற்றுள்ளனர்.

***

SM/PKV/DL


(Release ID: 2128247) Visitor Counter : 2