நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உரிமம் பெற்ற வயர்லெஸ் சாதனங்களை (வாக்கி-டாக்கீஸ்) சட்டவிரோதமாக விற்பனை செய்ததற்காக மின் வணிக தளங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் 13 நோட்டீஸ்களை வழங்கியுள்ளது

Posted On: 09 MAY 2025 4:51PM by PIB Chennai

முறையான உரிமத் தகவல், உபகரண வகை ஒப்புதல் இல்லாமல் மின் வணிக தளங்களில் வாக்கி-டாக்கிகளை பட்டியலிடுவதற்கும் விற்பனை செய்வதற்கும் எதிராக முன்னணி மின் வணிக சந்தைகளுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம், பதின்மூன்று நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது.

அமேசான், ஃபிளிப்காட், மீசோ, ஓஎல்எக்ஸ், டிரேட் இந்தியா, பேஸ்புக், இந்தியா மார்ட், வர்டான் மார்ட், ஜியோ மார்ட், கிருஷ்ணா மார்ட், சிமியா, உள்ளிட்டவையும்  இதில் அடங்கும்.

வயர்லெஸ் இயக்க உரிமத்தின் தேவை அல்லது பொருந்தக்கூடிய சட்டங்களுடன் இணங்குவது குறித்து கட்டாய, தெளிவான விளக்கங்கள் இல்லாமல் மின் வணிக தளங்களில் வாக்கி-டாக்கிகள் விற்கப்படுகின்றன. வாக்கி-டாக்கிகளுக்கான தயாரிப்பு பட்டியல்களில் சாதனத்தைப் பயன்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரியிடமிருந்து உரிமம் தேவையா என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. மேலும், நுகர்வோர் பாதுகாப்பு (மின்னணு வணிகம்) விதிகள், 2020ன் கீழ் சந்தை மின்வணிக நிறுவனங்கள், தெளிவான மற்றும் அணுகக்கூடிய தகவல்களை வழங்க வேண்டும். இது நுகர்வோர் பொருளை வாங்குவதற்கு முந்தைய கட்டத்திலேயே தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவுகிறது. அத்தியாவசிய ஒழுங்குமுறை விதிகள் தெரிவிக்கப்படாத நிலையில்  வயர்லெஸ் சாதனங்களை விற்பனை செய்வது நுகர்வோரை தவறாக வழிநடத்துகிறது மற்றும் சட்டப்பூர்வ கடமைகளின் கடுமையான மீறலைக் குறிக்கிறது.

இது குறித்த முதற்கட்ட பகுப்பாய்வானது, இந்த தளங்களில் இதுபோன்ற கருவிகள் பட்டியல்களின் ஆபத்தான அளவை மேலும் வெளிப்படுத்தியது. எனவே, ஒவ்வொரு விற்பனையாளரின் பெயர் மற்றும் தொடர்பு விவரங்கள், தயாரிப்பு யுஆர்எல்-கள் மற்றும் வாக்கி-டாக்கி சாதனங்களின் பட்டியல் ஐடிகள், ஜனவரி 2023 முதல் இன்றுவரை ஒரு பட்டியலுக்கு விற்கப்பட்ட யூனிட்களின் எண்ணிக்கை பற்றிய தகவல்களை மத்திய ஆணையம் கோரியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2127931

***

TS/GK/SG/KR/DL


(Release ID: 2127959) Visitor Counter : 2
Read this release in: English , Urdu , Hindi , Gujarati