பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
உலக வங்கி நில மாநாடு 2025 நிறைவு - இந்தியாவின் கிராமப்புற ஆளுகை மாதிரிகளை செயல்படுத்த நாடுகள் ஆர்வம்
Posted On:
09 MAY 2025 3:52PM by PIB Chennai
உலக வங்கி நில மாநாடு 2025- இல் இந்தியாவின் வலுவான தாக்கம் இடம்பெற்றது. 2025 மே 5 முதல் 8 வரை வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்ற நான்கு நாள் மாநாட்டில், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் ஸ்ரீ விவேக் பரத்வாஜ் தலைமையில் இந்தியா ஒரு சாம்பியனாகப் பங்கேற்றது. மாநாட்டின் போது, தொழில்நுட்பம் சார்ந்த கிராமப்புற ஆளுகையின் மாதிரிகளாக, ஸ்வமித்வா திட்டம், கிராம மஞ்சித்ரா தளம் போன்ற இந்தியாவின் முதன்மை முயற்சிகள் மீது உலகளவில் கவனம் ஈர்க்கப்பட்டது.
"நில உரிமை மற்றும் நிர்வாக சீர்திருத்தத்தில் சிறந்த நடைமுறைகள் மற்றும் சவால்கள்" என்ற தலைப்பில் நடைபெற்ற அமர்வில், நில உரிமை எவ்வாறு பாதுகாப்பானது, அது எவ்வாறு வாழ்வாதாரத்தை மேம்படுத்துகிறது, பெண்களுக்கு அதிகாரம் அளிக்கிறது, கிராமப்புற இந்தியாவில் கடன் பெற உதவுகிறது என்பதை ஸ்வமித்வா திட்டம் மூலம் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், பெண்கள் மற்றும் சிறு தொழில்முனைவோரின் நிஜ வாழ்க்கையின் வெற்றிக் கதைகள் இந்தியாவில் சொத்துரிமைகள் மற்றும் முறைப்படுத்தப்பட்ட நிலப் பதிவுகளின் தாக்கத்தை விளக்கிச் சொல்லின. அதைத் தொடர்ந்து, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் "ஒரு பில்லியன் மக்களுக்கு நில உரிமைகளைப் பெறுதல்" என்ற உயர்மட்ட சிறப்பு அமர்வை நடத்தியது, இந்த மாநாட்டில் உலக வங்கி பிரிவுகள் மற்றும் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர், இதில் ட்ரோன் ஆய்வுகள், சட்ட கட்டமைப்புகள் முதல் சொத்து அட்டை வழங்கல் வரையான நடவடிக்கைகள், நிறுவன ஒருங்கிணைப்பு வரையிலான ஸ்வமித்வா திட்டத்தின் செயல்படுத்தல் முறை ஆகியவை குறித்து விளக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2127907
***
TS/GK/SG/RR
(Release ID: 2127942)