சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் துப்புரவு தொழிலாளர்களுக்கு நமஸ்தே திட்ட துப்புரவு தொகுப்புகள் மற்றும் ஆயுஷ்மான் அட்டைகளை வழங்கினார்
Posted On:
08 MAY 2025 7:51PM by PIB Chennai
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், தேசிய இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவு சூழலியல் நடவடிக்கை (நமஸ்தே) திட்டத்தின் கீழ், சஃபாய் கரம்சாரிகளுக்கு துப்புரவு கருவிகள் மற்றும் ஆயுஷ்மான் அட்டைகளை இன்று சத்ரபதி சம்பாஜிநகரில் வழங்கினார்.
சத்ரபதி சம்பாஜிநகரில் 110 கழிவுநீர் மற்றும் கழிவுநீர் தொட்டி தொழிலாளர்கள் நமஸ்தே திட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளனர். அவர்களில் சிலருக்கு பிபிஇ கருவிகள் மற்றும் ஆயுஷ்மான் அட்டைகள் விநியோகிக்கப்பட்டன. இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவு வாகனங்கள் வாங்குவதற்கான மானிய விலையில் குறைந்த வட்டி கடனுக்கான அனுமதி கடிதங்களும் பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டன.
அவசரகால பதில்வினை துப்புரவுப் பிரிவு அமைப்பதற்கான பாதுகாப்பு சாதனங்களை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், சத்ரபதி சம்பாஜிநகர் கூடுதல் ஆணையர் திரு ரஞ்சித் பாட்டீலிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் வீரேந்திர குமார், துப்புரவுத் தொழிலாளர்களின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்து, சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அவர்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவு சூழலுக்கான தேசிய நடவடிக்கை (நமஸ்தே) திட்டம் குறித்து தெரிவித்தார். இதுவரை, இந்தத் திட்டத்தின் கீழ் 68,547 கழிவுநீர் செப்டிக் டேங்க் தொழிலாளர்கள் சுயவிவரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 45,871 தொழிலாளர்களுக்கு பிபிஇ கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 28,447 பேருக்கு ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2127798
***
RB/DL
(Release ID: 2127825)
Visitor Counter : 5