பாதுகாப்பு அமைச்சகம்
ஒரு மாத கால பெருங்கடல் ரோந்துப் பணிகளுக்குப் பின் ஐஎன்எஸ் சுனைனா கப்பல் கொச்சிக்குத் திரும்பியது
Posted On:
08 MAY 2025 5:43PM by PIB Chennai
ஒன்பது இந்தியப் பெருங்கடல் பகுதி நாடுகளின் கடற்படைகளைச் சேர்ந்த பணியாளர்கள் கூட்டாகப் பயணித்து ரோந்துப் பணியாற்றிய இந்தியக் கடற்படையின் கப்பலான ஐஎன்எஸ் சுனைனா ஒரு மாத காலப் பணியை முடித்து, இன்று (மே 08, 2025) கொச்சிக்குத் திரும்பியது. கொச்சியில் உள்ள கடற்படைத் தளத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான வரவேற்பு விழாவில், இந்தியா மற்றும் ஒன்பது நட்பு நாடுகளின் குழுவினரை தெற்கு கடற்படை கட்டளையின் கொடி அதிகாரி வைஸ் அட்மிரல் வி ஸ்ரீனிவாஸ் வரவேற்றார்.
இந்தப் பணி வெற்றிகரமாக நிறைவடைந்திருப்பது கடல்சார் ஒத்துழைப்பில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது. இக்கப்பலை 2025 ஏப்ரல் 05 அன்று கார்வாரில் இருந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்தப் பணியின் போது, இக்கப்பல் டார்-எஸ்-சலாம், நகாலா, போர்ட் லூயிஸ், போர்ட் விக்டோரியா, மாலே ஆகிய இடங்களுக்குத் துறைமுகப் பயணங்களை மேற்கொண்டது. இந்த பணியின் முக்கிய சிறப்பம்சங்களில் கூட்டு கடற்படைப் பயிற்சிகள், தொழில்முறை நடவடிக்கைகள், கலாச்சார பரிமாற்றங்கள் ஆகியவை இடம்பெற்றன. இந்தியாவிற்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இடையிலான பிராந்திய கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், இந்தக் கப்பல் ஏப்ரல் 13 முதல் 18, 2025 வரை இந்தியா மற்றும் தான்சானியாவால் கூட்டாக நடத்தப்பட்ட பயிற்சியில் பங்கேற்றது.
***
(Release ID: 2127730)
SM/PLM/AG/DL
(Release ID: 2127780)
Visitor Counter : 2