பாதுகாப்பு அமைச்சகம்
சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சி (IMDEX) - 2025
प्रविष्टि तिथि:
07 MAY 2025 2:54PM by PIB Chennai
சிங்கப்பூரில் சாங்கி கண்காட்சி மையத்தில் நடைபெறும் சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சி (இம்டெக்ஸ் ஆசியா) 2025-ல் பங்கேற்க இந்தியக் கடற்படைக் கப்பல் ஐஎன்எஸ் கில்டன் சிங்கப்பூர் வந்தடைந்தது.
இந்தியக் கடற்படையின் செயல்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதியாக இந்தப் பயணம் அமைந்துள்ளது. இது இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான வலுவான கடல்சார் ஒத்துழைப்பை எடுத்துக் காட்டுகிறது.
சிங்கப்பூரில் பயணம் மேற்கொள்ளும் காலத்தில், கப்பல் குழுவினர் தொடர்ச்சியான இருதரப்பு, பன்முக நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். இதில் சிங்கப்பூர் கடற்படையும் இம்டெக்ஸ் ஆசியா கண்காட்சியில் பங்கேற்கும் பிற நாட்டு கடற்படைகளும், தொழில்முறை பரிமாற்றங்களில் பங்கேற்கும்.
இந்த செயல்பாடுகள் கடற்படை ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், செயல்பாட்டுத்தன்மையை மேம்படுத்துதல், கடற்படைகளுக்கு இடையே பரஸ்பர புரிதலை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்தப் பயணம், இந்தியா - சிங்கப்பூர் ஆகிய இரு கடல்சார் ஒத்துழைப்பு நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவுக்கான இந்தியக் கடற்படையின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.
***
(Release ID: 2127494)
TS/PLM/RR/KR
(रिलीज़ आईडी: 2127500)
आगंतुक पटल : 67