சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

‘சுகாதாரத் துறையில் பேரிடர் தயார்நிலை மற்றும் மீட்பு’ & ‘சுகாதார மையங்களில் தீ விபத்திலிருந்து பாதுகாப்பு’ குறித்த 2வது தேசிய பயிலரங்கு மத்திய சுகாதார அமைச்சர் திரு. ஜே.பி. நட்டா தொடங்கி வைத்தார்

Posted On: 06 MAY 2025 7:56PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் ‘சுகாதாரத் துறையில் பேரிடர் தயார்நிலை மற்றும் மீட்பு’ & ‘சுகாதார மையங்களில் தீ விபத்திலிருந்து பாதுகாப்பு’ குறித்த 2வது தேசிய பயிலரங்கை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா இன்று தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் பேரிடர் ஒருங்கிணைப்பு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து 'தீ விபத்து பாதுகாப்பு வாரத்தின்' ஒரு பகுதியாக அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் நிறைவாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை பிரிவின் பயிலரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

 

நட்டா தனது உரையின் போது, பேரிடர் தயார்நிலை மற்றும் தீ விபத்திலிருந்து பாதுகாப்பை நோக்கி அமைச்சகத்தின் தொடர்ச்சியான மற்றும் செயலூக்கமான முயற்சிகளை அடிக்கோடிட்டுக் காட்டினார். "நமது சுகாதார வசதிகளை மேலும் நெகிழ்திறன் கொண்டதாகவும், பேரழிவு மற்றும் தீ விபத்துகளை எதிர்க்கும் திறனுடையதாகவும் மாற்ற வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தினார். அதனால்தான் இதுபோன்ற பேரிடர் மேலாண்மை பயிலரங்குகளைத் தொடர்ந்து ஏற்பாடு செய்வது அவசியம்" என்றார். "பேரழிவுகளின் தடுப்பு பணிகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும், இதனால் தடையற்ற, விரிவான மற்றும் தரமான சுகாதார சேவைகளை உறுதி செய்ய முடியும், மேலும் நாம் விழிப்புடன் இருக்க முடியும்; எதிர்பாராத சூழ்நிலைகளைத் தணித்து நிவர்த்தி செய்யுங்கள்”, என்று திரு நட்டா கேட்டுக்கொண்டார்.

 

பேரிடர் எதிர்வினை தொடர்பாக சுகாதாரப் பணியாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் மத்திய சுகாதார அமைச்சர் அடிக்கோடிட்டுக் காட்டினார். இதற்காக கோட்பாட்டு அறிவுடன் நடைமுறை அறிவு மற்றும் பயிற்சியின் அவசியத்தையும் வலியுறுத்தினார். நிறுவனங்களில் வழக்கமான தீ பாதுகாப்பு தணிக்கைகளின் அவசியத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார் என்றும், பேரழிவுகள் ஏற்படுவதற்கு முன்பு தடுக்கப்பட வேண்டும் என்றும் திரு நட்டா வலியுறுத்தினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2127328

***

RB/DL


(Release ID: 2127348)
Read this release in: Marathi , English , Urdu , Hindi