சுரங்கங்கள் அமைச்சகம்
2024-25 நிதியாண்டில் சுரங்கத் துறையில் சாதனை அளவிலான உற்பத்தி
Posted On:
05 MAY 2025 12:14PM by PIB Chennai
நாட்டின் சில முக்கியமான கனிமங்களின் உற்பத்தி நிதியாண்டு 2024-25-ல் வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளது. தற்போது கிடைத்துள்ள தரவுகளின்படி நிதியாண்டு 2024-25-ல் இரும்பு தாது உற்பத்தி 289 மில்லியன் மெட்ரிக் டன்னாக உள்ளது. இது நிதியாண்டு 2023-24-ல் இருந்த 277 மில்லியன் மெட்ரிக் டன் என்ற சாதனையை விஞ்சியுள்ளது. இதே போல் நிதியாண்டு 2023-24-ல் 3.4 மில்லியன் மெட்ரிக் டன் என்ற மாங்கனீஸ் தாது உற்பத்தியானது கடந்த நிதியாண்டு 2024-25-ல் 11.8 சதவீத அதிகரிப்புடன் 3.8 மில்லியன் மெட்ரிக் டன்னாக உள்ளது. நிதியாண்டு 2023-24-ல் 24 மில்லியன் மெட்ரிக் டன் என்ற பாக்சைட் உற்பத்தி நிதியாண்டு 2024-25-ல் 2.9 சதவீத அதிகரிப்புடன் 24.7 மில்லியன் மெட்ரிக் டன்னாக உள்ளது. இதே காலகட்டத்தில் கட்டி ஈயம் உற்பத்தி 3.1 சதவீத அதிகரிப்புடன் 3 லட்சத்து 81 ஆயிரம் டன் என்பதிலிருந்து 3 லட்சத்து 93 ஆயிரம் டன்னாக அதிகரித்துள்ளது.
நிதியாண்டு 2023-24-ல் 41.6 லட்சம் மெட்ரிக் டன் என்ற அலுமினிய உற்பத்தி நிதியாண்டு 2024-25-ல் 42 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. சுத்திகரிக்கப்பட்ட செம்பு உற்பத்தியும் வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளது. நிதியாண்டு 2023-24-ல் 5.09 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த உற்பத்தி 12.6 சதவீத அதிகரிப்புடன் நிதியாண்டு 2024-25-ல் 5.73 லட்சம் மெட்ரிக் டன் ஆகியுள்ளது.
இந்தியா அலுமினிய உற்பத்தியில் 2-வது பெரிய நாடாகவும், சுத்திகரிக்கப்பட்ட செம்பு உற்பத்தியில் முதல் 10 நாடுகளில் ஒன்றாகவும், இரும்புத் தாது உற்பத்தியில் 4-வது பெரிய நாடாகவும் உள்ளது. நடப்பு நிதியாண்டில் தொடர்ந்து இரும்புத் தாது உற்பத்தி அதிகரித்திருப்பது இதனை பயன்படுத்தும் தொழில் துறையின் தேவைகளை பிரதிபலிக்கிறது. அலுமினியம், செம்பு ஆகியவற்றின் தேவை அதிகரித்திருப்பது, இவற்றை பயன்படுத்தும் எரிசக்தி, உள்கட்டமைப்பு, தானியங்கி வாகனங்கள், எந்திரங்கள் ஆகியவற்றில் வலுவான பொருளாதார செயல்பாடு தொடரும் போக்கினை சுட்டிக்காட்டுகிறது.
***
(Release ID: 2126960)
TS/SMB/RR/KR
(Release ID: 2126982)
Visitor Counter : 20