நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே, சிஎம்பிடிஐ நிறுவனத்தின் செயல்திறனை ஆய்வு செய்தார்
Posted On:
04 MAY 2025 6:32PM by PIB Chennai
ராஞ்சியில் இன்று (04.05.2025) மத்திய சுரங்கத் துறை இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே மத்திய சுரங்கத் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு நிறுவனமான சிஎம்பிடிஐ-யின் (CMPDI) செயல்திறனை ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் சிஎம்பிடிஐ-யின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு மனோஜ் குமார் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மறுஆய்வுக் கூட்டத்தின் போது, 2024-25-ம் ஆண்டின் செயல்பாடுகள், மூலதன செலவுகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள், சூரிய சக்தித் திட்டங்கள், பெருநிறுவன பொறுப்புணர்வு (சிஎஸ்ஆர்) முயற்சிகள் போன்ற பல்வேறு செயல்பாட்டுத் துறைகளில் சிஎம்பிடிஐ-யின் செயல்திறன் ஆய்வு செய்யப்பட்டது. 2025-26 ஆம் ஆண்டிற்கான இலக்குகளும் இதில் முன்வைக்கப்பட்டது.
சிஎம்பிடிஐ-யின் செயல்திறனைப் பாராட்டிய இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே, முக்கிய கனிமங்களை ஆராய்தல், சூரிய சக்தி பயன்பாட்டை அதிகரித்தல், புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தினார்.
****
(Release ID: 2126812)
SM/PLM,/RJ
(Release ID: 2126849)
Visitor Counter : 12