அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

உலக அறிவுசார் சொத்துரிமை தினத்தையொட்டி பெங்களூரு ஐஐஎஸ்சி நிறுவனத்தில் தேசிய பயிலரங்கு நடைபெற்றது

Posted On: 03 MAY 2025 3:25PM by PIB Chennai

உலக அறிவுசார் சொத்துரிமை (IP-ஐபி) தினம் - 2025-ஐ  முன்னிட்டு, பெங்களூருவில் செயல்படும் இந்திய அறிவியல் நிறுவனத்தில், "புதுமைகளை அறிவுசார் சொத்துரிமையுடன் மேம்படுத்துதல்: வணிகமயமாக்கலுக்கான உத்திசார் அணுகுமுறைகள்" என்ற தலைப்பில்  தேசிய பயிலரங்கு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள், புத்தொழில் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் சார்பில் 250-க்கும் மேற்பட்டோர் நேரில் பங்கேற்றனர். 500 பேர் காணொலி மூலம் கலந்து கொண்டனர்.

ஆராய்ச்சிக்கும் சந்தைக்கும் இடையிலான இடைவெளிகளைக் குறைத்தல், பயனுள்ள உரிம உத்திகள், சிறந்த கொள்கைகள், நிறுவன சூழல் மாற்றங்களின் பங்கு ஆகியவை தொடர்பாகக் குழு விவாதங்கள் நடைபெற்றன. உலகளாவிய போட்டித்தன்மையை வளர்ப்பதன் மூலம் இந்தியாவின் புதுமைக் கண்டுபிடிப்புச் சூழல் அமைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான அழைப்போடு பயிலரங்கு நிறைவடைந்தது.

****

(Release ID: 2126460)

TS/PLM/RJ


(Release ID: 2126508) Visitor Counter : 18
Read this release in: English , Urdu , Hindi