தேசிய மனித உரிமைகள் ஆணையம்
கேரள சிறைகளில் கைதிகள் கல்வி கற்கத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் மனிதவளம் இல்லாதது குறித்த பிரச்சினையை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது
प्रविष्टि तिथि:
02 MAY 2025 12:51PM by PIB Chennai
கேரள சிறைகளில் கைதிகள் கல்வி கற்கத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் மனிதவளம் இல்லாதது குறித்து ஊடகங்களில் வெளியான செய்தியை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து கவனத்தில் கொண்டுள்ளது. கடுமையான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் உட்பட கைதிகள், வழக்கமான அல்லது ஆன்லைன் கல்விப் படிப்புகளில் சேருவதன் மூலம் தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முயற்சிக்கின்றனர். ஆனால் அதிகாரிகள் அவர்களின் முயற்சிகளை ஆதரிக்கத் தயங்குவதாக கூறப்படுகிறது.
செய்தி உண்மையாக இருந்தால், கல்வித் திட்டங்கள்/படிப்புகளைத் தொடர விரும்பும் கைதிகளின் மனித உரிமைகள் மீறல் தொடர்பான பிரச்சினைகளை எழுப்புகின்றன என்பதை ஆணையம் கவனத்தில் கொண்டுள்ளது. எனவே, கேரள அரசின் சிறைச்சாலைகளின் தலைமை இயக்குநருக்கு ஆணையம் ஒரு நோட்டீஸ் அனுப்பி, இந்த விவகாரம் குறித்து நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
2025 ஏப்ரல் 25 அன்று வெளியிடப்பட்ட ஊடகச் செய்தியின்படி, கேரள சிறை அதிகாரிகள், கடுமையான பணியாளர் பற்றாக்குறை, பிரத்யேக சாதனங்கள் இல்லாதது மற்றும் ஆன்லைனில் படிக்க விரும்பும் கைதிகளுக்கு பாதுகாப்பான இணைய இணைப்பு இல்லாதது ஆகியவற்றை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. கைதிகள் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே இணையத்தைப் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்கான கண்காணிப்பு அமைப்பு எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. இதில் மற்றொரு சவாலும் உள்ளதாகத் தெரிகிறது. சிறையிலிருந்து வெளியேறுவதற்கான இடைக்கால விடுதலையைப் பெறுவதற்கான ஒரு தந்திரமாக, சில ஆபத்தான குற்றவாளிகளும் இப்போது வழக்கமான பாடநெறிக்கு விண்ணப்பிக்க முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2126074
----
SM/PKV/KPG/SG
(रिलीज़ आईडी: 2126102)
आगंतुक पटल : 26