நிதி அமைச்சகம்
அமலாக்க இயக்குநரகத்தின் 69-வது நிறுவன தின விழாவுக்கு மத்திய இணையமைச்சர் திரு பங்கஜ் சவுத்ரி தலைமை தாங்கினார்
Posted On:
01 MAY 2025 6:28PM by PIB Chennai
புதுதில்லியில் இன்று நடைபெற்ற அமலாக்க இயக்குநரகத்தின் 69-வது நிறுவன தின விழாவுக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு பங்கஜ் சவுத்ரி தலைமை தாங்கினார்.
கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திரு எஸ்.வி.ராஜு, அமலாக்க இயக்குநர் திரு ராகுல் நவீன், சிறப்பு இயக்குநர்கள் திரு சுபாஷ் அகர்வால் மற்றும் திரு பிரசாந்த் குமார் மற்றும் நிதி அமைச்சகத்தின் வருவாய் துறை இணைச் செயலாளர் திரு நவல் கிஷோர் ராம் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு சவுத்ரி, "எந்தவொரு பொருளாதார குற்றவாளியும் சாதாரண மற்றும் ஏழை குடிமக்களின் உரிமைகளை பறிக்க முடியாது என்பதே நமது பிரதமர் திரு நரேந்திர மோடியின் பார்வை, இதற்கு தடுப்பு நடவடிக்கைகள் அவசியம், அத்துடன் குற்றவாளி பொருத்தமான தண்டனையைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இந்த இரண்டு துறைகளிலும் அமலாக்கத் துறையின் பங்கு மிகவும் முக்கியமானது" என்றார்.
"வளர்ந்த இந்தியாவின் பார்வை இயல்பாகவே பாதுகாப்பான இந்தியா என்ற பார்வையை உள்ளடக்கியது. பொருளாதார ரீதியாக பாதுகாப்பான இந்தியாவில் அமலாக்க இயக்குநரகத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கும்" என்று அமைச்சர் மேலும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2125863
***
(Release ID: 2125863)
RB/DL
(Release ID: 2125953)
Visitor Counter : 17