மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக சுஜாதா சதுர்வேதி பொறுப்பேற்றார்

Posted On: 01 MAY 2025 3:06PM by PIB Chennai

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் விளையாட்டுத் துறையின் முன்னாள் செயலாளர் சுஜாதா சதுர்வேதி இன்று பதவியேற்றுக் கொண்டார். ஆணையத்தின் மூத்த உறுப்பினரான லெப்டினன்ட் ஜெனரல் ராஜ் சுக்லா (ஓய்வு) பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சுஜாதா சதுர்வேதி நாக்பூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் இளங்கலையும், வரலாற்றில் முதுகலையும் பெற்றவராவார். பொது நிர்வாகத்தில் எம்.பில் மற்றும் ரஷ்ய மொழியில் டிப்ளோமாவும் பெற்றுள்ளார்.

சுஜாதா சதுர்வேதி 1989 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணித் தொகுப்பைச் சேர்ந்தவர். அவருக்கு பீகார் மாநிலத்தில் பணி ஒதுக்கப்பட்டது. மாநில அரசுப் பணியிலும், மத்திய அரசிலும் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பரந்த நிர்வாக அனுபவம் கொண்டவர். மாநிலத்தில், நிதித் துறை முதன்மைச் செயலாளர், வணிக வரி ஆணையர், செயலாளர், நகர்ப்புற மேம்பாட்டு இயக்குநர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். மத்திய அரசில், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை செயலாளராகவும், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் பிராந்திய துணை தலைமை இயக்குநர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார்.  அவர் விளையாட்டுத் துறையின் செயலாளராக இருந்த காலத்தில், நாட்டில் விளையாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான பல முயற்சிகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார். வருடாந்திர கேலோ இந்தியா விளையாட்டு, ஃபிடே செஸ் ஒலிம்பியாட், ஃபிஃபா 17 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கோப்பை, தேசிய விளையாட்டு களஞ்சிய அமைப்பை செயல்படுத்துதல், நிலையான விளையாட்டு வசதிகளின் நாடு தழுவிய வரைபடம் தயாரித்தல் மற்றும் ஊக்கமருந்துக்கு எதிரான நாட்டின் போராட்டத்தை வலுப்படுத்த ஊக்கமருந்து எதிர்ப்பு மசோதாவை இயற்றுதல் ஆகியவை அவரது குறிப்பிடத்தக்க பணிகளாகும்.

சுஜாதா சதுர்வேதி மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்தி, ஆங்கிலம், உருது, ரஷ்யன் மற்றும் மராத்தி மொழிகளில் உரையாடும் திறமை பெற்றவர்.

***

(Release ID: 2125747)

TS/PKV/RJ


(Release ID: 2125791) Visitor Counter : 13
Read this release in: English , Urdu , Marathi , Hindi