தேசிய மனித உரிமைகள் ஆணையம்
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள மோகாமா பகுதியில் மதிய உணவு உட்கொண்ட 100-க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்தியை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது
Posted On:
01 MAY 2025 11:44AM by PIB Chennai
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள மோகாமா பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 2025 ஏப்ரல் 24 அன்று மதிய உணவு உட்கொண்ட 100-க்கும் அதிகமான குழந்தைகள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்தி அறிந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது. இறந்து கிடந்த பாம்பை அகற்றிய பின்னர் சமையல்காரர் குழந்தைகளுக்கு உணவை பரிமாறியதாகக் கூறப்படுகிறது.
இந்த செய்தி உண்மையாக இருந்தால், அது மாணவர்களின் மனித உரிமை மீறல் குறித்த கடுமையான பிரச்சினையை எழுப்புவதாகும் என்று ஆணையம் கருதுகிறது. எனவே, இந்த விவகாரம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு பீகார் அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் பாட்னாவின் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த அறிக்கையில் குழந்தைகளின் சுகாதார நிலை சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2025 ஏப்ரல் 25 அன்று சுமார் 500 குழந்தைகள் மதிய உணவு உட்கொண்டதாக ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதிய உணவை உட்கொண்டதால் குழந்தைகள் நோய்வாய்ப்படுவது குறித்த செய்தி அறிந்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
***
(Release ID: 2125686)
TS/IR/KPG/RJ
(Release ID: 2125706)
Visitor Counter : 21