நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் தூய்மை இருவார விழாவைக் கடைப்பிடித்தது
Posted On:
30 APR 2025 5:39PM by PIB Chennai
மகாத்மா காந்தியின் தூய்மையான, சுகாதாரமான இந்தியா என்ற கனவை நனவாக்கும் நோக்கில், மத்திய அரசின் தூய்மை இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக, நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் 2025 , ஏப்ரல் 16 முதல் 30 வரை தூய்மை இருவார விழாவைக் கடைப்பிடித்தது.
நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளர் திரு உமாங் நருலா, அமைச்சகத்தின் அனைத்து அதிகாரிகள் மற்றும் பிற ஊழியர்கள் தூய்மை உறுதிமொழியை ஏற்கச் செய்ததுடன் ஏப்ரல் 16, 2025 அன்று இருவார விழா தொடங்கியது.
2025, ஏப்ரல் 30 அன்று பரிசளிப்புடன் தூய்மை இருவார விழா நிறைவடைந்தது, நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளர் திரு உமாங் நருலா, தூய்மைக்கான சிறந்த அர்ப்பணிப்புக்காக முதல் மூன்று அலுவலகப் பிரிவுகளை பாராட்டினார்.
அமைச்சக ஊழியர்களின் உற்சாகமான பங்கேற்பைப் பாராட்டிய செயலாளர், தூய்மை என்பது ஆண்டு முழுவதும் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். கணினி செயல்திறன் மற்றும் நீண்ட ஆயுளை மேம்படுத்த தேவையற்ற தரவுகளை அகற்றுவது உட்பட, வலுவான சைபர் பாதுகாப்பு நடைமுறைகளுடன் டிஜிட்டல் தூய்மையின் முக்கியத்துவத்தையும் செயலாளர் வலியுறுத்தினார். தூய்மை இந்தியா திட்டத்தின் மீதான தனது உறுதிப்பாட்டை மீண்டும் எடுத்துக்காட்டிய அமைச்சகம் தூய்மை மற்றும் நிலைத்தன்மையை தொடர்ந்து மேம்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2125513
*******
TS/SMB/DL
(Release ID: 2125562)
Visitor Counter : 8