தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
மத்திய அமைச்சர்கள் டாக்டர் மன்சுக் மாண்டவியா மற்றும் திருமிகு ஷோபா கரந்தலாஜே ஆகியோர் முன்னிலையில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், ரேபிடோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
Posted On:
29 APR 2025 7:45PM by PIB Chennai
தேசிய வேலைவாய்ப்பு சேவை (என்சிஎஸ்) இணையதளம் மூலம் சரக்குப் போக்குவரத்துத் துறையில் வேலைவாய்ப்பு இணைப்புகளை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையைக் குறிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மற்றும் ரேபிடோ இடையே புதுதில்லியில் இன்று கையெழுத்திட்டன. மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா மற்றும் இணையமைச்சர் திருமிகு ஷோபா கரந்தலாஜே ஆகியோர் முன்னிலையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
டாக்டர் மாண்டவியா தனது உரையில், "தேசிய வேலைவாய்ப்பு சேவை தளம் என்பது இந்தியா முழுவதும் வேலை தேடுபவர்கள் மற்றும் முதலாளிகளை ஒன்றிணைக்கும் ஒரு மாற்றகரமான தளமாகும். 1.75 கோடிக்கும் அதிகமான வேலை தேடுபவர்கள் மற்றும் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட முதலாளிகளுடன், இது தொழிலாளர் சக்தியை அணிதிரட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. என்சிஎஸ், நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. இது மை பாரத், இ-ஷ்ரம், சித், எம்இஏ - இமிகார்டே தளம் மற்றும் பல தனியார் தளங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
டாக்டர் மாண்டவியா இந்த ஒத்துழைப்பை வரவேற்றார் மற்றும் 1-2 ஆண்டுகளில் என்சிஎஸ் தளத்தில் 50 லட்சம் வாழ்வாதார வாய்ப்புகளைக் கொண்டுவருவதற்கான ரேபிடோவின் முயற்சியைப் பாராட்டினார். தளத்தின் அணுகல் மற்றும் சென்றடைதலை எடுத்துரைத்த மத்திய அமைச்சர், வேலைவாய்ப்பு, திறன் மற்றும் ஆலோசனை ஆகியவற்றிற்கான ஒரே நிறுத்த தீர்வாக என்சிஎஸ்-ஐ மாற்றுவதற்கான அரசின் பார்வையை மீண்டும் வலியுறுத்தினார்.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர் திருமிகு ஷோபா கரந்தலாஜே, என்சிஎஸ் மற்றும் ரேபிடோவின் கூட்டு முயற்சி குறித்து மகிழ்ச்சி தெரிவித்ததோடு, மகளிருக்கு 5 லட்சம் வேலைகள் உட்பட பெண்களுக்கு வேலைவாய்ப்பில் கவனம் செலுத்தியதற்காக ரேபிடோவை பாராட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2125275
*****
RB/DL
(Release ID: 2125308)
Visitor Counter : 7