தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
இந்தியா முழுவதும் முதலீட்டாளர்களுக்கான கே.ஒய்.சி. சரிபார்ப்பு சேவைகளை ஒழுங்குபடுத்த எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்டுடன் இந்தியா போஸ்ட் இணைந்துள்ளது
Posted On:
29 APR 2025 5:41PM by PIB Chennai
பரஸ்பர நிதி முதலீட்டாளர்களுக்கான வாடிக்கையாளர் ஒருங்கிணைப்பு செயல்முறையை எளிதாக்கும் ஒரு முயற்சியாக, அஞ்சல் துறையானது எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்டு நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன்படி எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்டு நிறுவனமானது தனது முதலீட்டாளர்களின் வீடுகளுக்கே சென்று கேஒய்சி சரிபார்ப்பு சேவைகளுக்கு இந்திய அஞ்சல் துறையின் விரிவான வலையமைப்பைப் பயன்படுத்திக் கொள்ளும்.
இந்த முயற்சி கேஒய்சி செயல்முறையை நெறிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியா முழுவதும் முதலீட்டாளர்களுக்கு வசதி, பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்தை இது உறுதி செய்கிறது.
புதுதில்லியில் நடைபெற்ற விழாவில், அஞ்சல் துறையின் வணிக மேம்பாட்டு இயக்குநரகத்தின் பொது மேலாளர் திருமதி மனிஷா பன்சால் பாதல் மற்றும் எஸ்பிஐ நிதி மேலாண்மை நிறுவன மூத்த துணைத் தலைவர் திரு முனிஷ் சபர்வால் இடையே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தானது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள முதலீட்டாளர்களிடமிருந்து தேவையான படிவங்கள் மற்றும் ஆவணங்களை சேகரித்து அதன் மூலம் எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவன முதலீட்டாளர்களுக்கான கேஒய்சி நடைமுறைகளை நிறைவு செய்ய இந்திய அஞ்சல் துறை உதவும்.
இந்திய அஞ்சல் துறையின் நாடு தழுவிய தொலைத் தொடர்பை மேம்படுத்துவதன் மூலம், முதலீட்டாளர்கள், அவர்களின் கேஒய்சி செயல்முறையை எளிதாக புதுப்பிகத்துக் கொள்ளமுடியும் என்பதை இந்த ஒப்பந்தம் உறுதி செய்கிறது. பாரம்பரிய நிதிச் சேவைகளை அணுகுவதில் பெரும்பாலும் சவால்களை எதிர்கொள்ளும் கிராமப்புற, பின்தங்கிய மற்றும் தொலைதூர பகுதிகளில் உள்ள முதலீட்டாளர்களுக்கு இது குறிப்பாக பயனளிக்கும். வீட்டுக்கு வீடு கேஒய்சி சேவை என்ற மகத்தான வசதியை முதலீட்டாளர்களுக்கு இது
வழங்கும். முழு செயல்முறையையும் தங்கள் வீடுகளில் இருந்தே முதலீட்டாளர்கள் முடித்துக்கொள்வதற்கு அனுமதிக்கிறது.
இந்த ஒத்துழைப்பானது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் நிதிச் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் தற்போதைய முயற்சிகளுக்கு முக்கிய பங்காற்றுகிறது.
*****
(Release ID: 2125220)
Ts/GK/SG/DL
(Release ID: 2125262)
Visitor Counter : 13