வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
இந்தியாவின் முதலாவது சான்றளிக்கப்பட்ட பசுமை நகராட்சி பத்திரங்கள் மூலம் காசியாபாத் நகர் நிகாம் நிலையான நீர் மேலாண்மைக்கு முன்னோடியாக உள்ளது
Posted On:
29 APR 2025 4:52PM by PIB Chennai
தூய்மை இந்தியா இயக்கம் - நகர்ப்புறத்தின் கீழ், காஜியாபாத் இந்தியாவின் முதல் சான்றளிக்கப்பட்ட பசுமை நகராட்சி பத்திரத்தை வெற்றிகரமாக வெளியிட்டதன் மூலம் நிலையான உள்கட்டமைப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டை ஊக்குவிப்பதில் முன்னேறியுள்ளது. அதிநவீன மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் வளர்ச்சிக்காக ரூ. 150 கோடியை திரட்டியுள்ளது.
இது மற்றொரு உள்கட்டமைப்பு திட்டம் மட்டுமல்ல - இது தனது குடிமக்களுக்கு நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான காஜியாபாத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் ஒரு அம்சமாகும். முன்னெப்போதும் இல்லாத அளவில் கழிவுநீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்த வடிவமைக்கப்பட்ட அதிநவீன வசதியான மேம்பட்ட துணை நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையை உருவாக்க இந்த நிதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பசுமை நகராட்சி பத்திரம் இந்தியாவின் நிதி சூழலில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறித்தது. நகர்ப்புற உள்கட்டமைப்புக்கு நிதியளிப்பதற்கான நிலையான மாதிரியை வழங்குகிறது. மத்திய அரசு மற்றும் உத்தரப்பிரதேச அரசு ஆகியவற்றின் ஆதரவுடன், இந்தத் திட்டம் நீர் சுத்திகரிப்பு வசதி மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உள்ள எதிர்கால நகரங்களுக்கான நிதி ஒழுக்கத்தை சுற்றுச்சூழல் பொறுப்புடன் இணைப்பதற்கான ஒரு திட்டமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2125188
*****
TS/IR/KPG/KR/DL
(Release ID: 2125259)
Visitor Counter : 12