தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
"உள்நாட்டு குத்தகை இணைப்புக்கான கட்டணம் மீள்பரிசீலனை" என்ற முன்ஆலோசனை அறிக்கையை டிராய் வெளியிட்டது
प्रविष्टि तिथि:
29 APR 2025 2:51PM by PIB Chennai
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உள்நாட்டு குத்தகை இணைப்பு சுற்று கட்டண மதிப்பாய்வு குறித்து பங்குதாரர்களிடமிருந்து ஆலோசனை அறிக்கையை கோரியுள்ளது.
உள்நாட்டு குத்தகை சுற்றுக்களின் தற்போதைய சிக்கல்கள், கவலைகள், ஆலோசனைகளை சமர்ப்பிக்க முன் ஆலோசனை செயன்முறையில் பங்கேற்குமாறு அனைத்து பங்குதாரர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன் ஆலோசனை அறிக்கை மீதான எழுத்துப்பூர்வ கருத்துகள் 2025 மே 19 க்குள் பங்குதாரர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட உள்ளீடுகள், கருத்துக்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு கட்டணங்களை மீளாய்வு செய்வதற்கான தேவை குறித்து ஆணையத்தால் பரிசீலிக்கப்படும்.
கருத்துக்களை மின்னணு வடிவில் advfea2@trai.gov.in என்ற இமெயிலுக்கு அனுப்பலாம். மேலும், விளக்கம் மற்றும் தகவல்களுக்கு டிராய் நிறுவனத்தின் ஆலோசகர் (நிதி மற்றும் பொருளாதார பகுப்பாய்வு) விஜயகுமாரை தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். +91-11-20907773.
***
(Release ID: 2125123)
TS/GK/SG/KR
(रिलीज़ आईडी: 2125176)
आगंतुक पटल : 25