பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
தென் மாநிலங்களில் புதிய தலைமுறையினர் இந்தி கற்க ஆர்வத்துடன் உள்ளனர் : மத்திய இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங்
Posted On:
28 APR 2025 5:25PM by PIB Chennai
இந்தி மொழியை அரசுத் துறைகளில் ஊக்குவிப்பது சில அரசாங்கத் துறைகளின் பொறுப்பு மட்டுமே அல்ல, அது சமூகத்தின் பகிரப்பட்ட பொறுப்பு என்று மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
பணியாளர் நலன், பொது மக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதிய அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த இந்தி மொழி தொடர்பான ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பேசிய திரு ஜிதேந்திர சிங், இந்தி பயன்பாட்டை விரிவுபடுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், தொடர்ச்சியான முயற்சிகள் அவசியம் என்று கூறினார்.
இந்தி குறித்த சமூக அணுகுமுறையை மாற்றுவது அதைப் பரந்த அளவில் ஏற்றுக் கொள்வதற்கு முக்கியமானதாகும் என்று அவர் கூறினார். தற்போது தென் மாநிலங்களில் புதிய தலைமுறையினர், அரசியல் சூழல்களைப் பொருட்படுத்தாமல், இந்தி மொழியைக் கற்க அதிக ஆர்வமாக உள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.
கல்வி நிறுவனங்களில் இந்திப் பயன்பாட்டை வலுப்படுத்த புதுமையான வழிகள் தேவை என அவர் கூறினார். ஆலோசனைக் குழு உறுப்பினர்களின் ஆலோசனைகளை வரவேற்ற இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங், அவர்களின் உள்ளீடுகள் எதிர்கால உத்திகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2124894
***
TS/PLM/AG/DL
(Release ID: 2124937)
Visitor Counter : 15