ஜல்சக்தி அமைச்சகம்
நதி நகரங்கள் கூட்டமைப்பின் கீழ் நகர்ப்புற நதிகள் புனரமைப்பை வலுப்படுத்துவதற்கான செயல் திட்டம் 2025-க்கு தேசிய தூய்மை கங்கை இயக்கம் ஒப்புதல் அளித்துள்ளது
Posted On:
25 APR 2025 4:25PM by PIB Chennai
நீடித்த நகர்ப்புற நதிகளுக்கு புத்துயிரூட்டுவதற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, நதி நகரங்கள் கூட்டணிக்கான வருடாந்தர பெருந்திட்டத்திற்கு தூய்மை கங்கைக்கான தேசிய இயக்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் தொடர்ச்சியான திறன் வளர்ப்பு திட்டங்கள், அறிவு பரிமாற்ற தளங்கள், தொழில்நுட்ப கருவிகளின் வளர்ச்சி, நிபுணர் வழிகாட்டுதல், கருப்பொருள் ஆய்வுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இவை அனைத்தும் இந்தியாவின் வளர்ந்து வரும் நகரங்களுக்குள் நதி-உணர்திறனுடன் கூடிய நகர்ப்புற திட்டமிடலை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்துகின்றன.
2021-ல் தொடங்கப்பட்ட நதி நகரங்கள் கூட்டணி என்பது ஜல் சக்தி அமைச்சகம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் தலைமையிலான ஒரு முன்னோடி முயற்சியாகும். 145 நகரங்களை தற்போதைய உறுப்பினர்களாகக் கொண்டுள்ள இந்தக் கூட்டணி நகர்ப்புற நதி மேலாண்மைக்கு ஒரு விரிவான அணுகுமுறையை ஊக்குவிக்கிறது - இது நிறுவன திறனை வலுப்படுத்துகிறது. பலவிதமான உத்திசார் தலையீடுகளை ஏற்படுத்துவதன் மூலம் இந்த இலக்குகளை மேலும் செயல்படுத்தும் வகையில் இந்த ஆண்டின் அங்கீகரிக்கப்பட்ட திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களில் நதி உணர்திற பயிற்சித் திட்டங்களுக்கு ஏற்பாடு செய்வதன் மூலம் நகர பெருந்திட்டங்களுக்குள் நதிகள் சம்பந்தப்பட்டவற்றை மேம்படுத்துவது இந்த ஆண்டின் முக்கிய கவனமாக இருக்கும். இதன் தொடர்ச்சியாக நகர்ப்புற நதி மேலாண்மை திட்டங்களை உருவாக்குவதற்கு தமிழ்நாட்டில் உள்ள நதிநகர கூட்டணி நகரங்களில் தேசிய கங்கை நதி தூய்மை இயக்கம் பயிற்சி அமர்வுகளை நடத்தும். கூடுதல் மாநிலங்களுக்கு மேலும் பல அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் இந்தியா முழுவதும் இதுபோன்ற 60 திட்டங்களை உருவாக்குவதற்கான ஒரு பெரிய திட்டத்தின் முதல் கட்டமாக மேலும் 25 நகர்ப்புற நதி மேம்பாட்டு திட்டங்களின் வளர்ச்சி வரும் ஆண்டு கணக்கில் கொள்ளப்படும். உலக வங்கியின் ஆதரவுடன், இந்த முயற்சி நதி-உணர்திறன் நகர்ப்புற நிர்வாகத்தை ஆழப்படுத்துவதில் ஒரு துணிச்சலான நடவடிக்கையைக் குறிக்கிறது. உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் திட்டங்களை உருவாக்கவும், செயல்படுத்துவதற்கு வழிகாட்டவும் ஏற்கனவே குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2124307
***
TS/SMB/AG/KR
(Release ID: 2124351)
Visitor Counter : 24