அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அரிய வகை கனிம தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கான நோக்க அறிக்கை ஒப்பந்தத்தில் கையெழுத்து
Posted On:
25 APR 2025 11:00AM by PIB Chennai
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் குழுமத்தின் கீழ் உள்ள முதன்மை கனிம ஆராய்ச்சி நிறுவனமான ஐ.எம்.எம்.டி நிறுவனம், ரஷ்யாவின் முன்னணி நிறுவனங்களான அரிய வகை உலோகத் தொழிலின் ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு நிறுவனம், ரஷ்யாவின் அணுசக்தி நிறுவனம், ரோசாட்டம், மாஸ்கோ, அறிவியல், தொழில்நுட்ப தேசிய பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இரண்டு கூட்டு நோக்க அறிக்கை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. அரிய வகை கனிம செயலாக்கம் மற்றும் நிலையான வள மேம்பாட்டில் இணைந்து செயல்படும் வகையில் சி.எஸ்.ஐ.ஆர்-ஐ.எம்.எம்.டி நிறுவன இயக்குநர் டாக்டர் ராமானுஜ் நாராயண், இரண்டு தனித்தனி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார. அரிய வகை கனிம தொழில்நுட்பங்களில் இருதரப்பு ஒத்துழைப்புக்கான இந்த கூட்டு ஒப்பந்தம் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தின் விண்வெளி ஆலோசகர் திரு அனூப் குமார் ஸ்ரீவஸ்தவா முன்னிலையில் கையெழுத்தானது.
புவனேஸ்வரில் உள்ள சிஎஸ்ஐஆர்-ஐஎம்எம்டி நிறுவனம் மற்றும் மாஸ்கோ ரோசாட்டமில் உள்ள அரியவைக உலோகத் தொழிலுக்கான ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு நிறுவனம் இடையே கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிபைக் காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2124199
***
TS/SV/RJ/KR
(Release ID: 2124226)
Visitor Counter : 18