தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
அக்டோபர்-டிசம்பர், 2024 காலாண்டிற்கான "இந்திய தொலைத்தொடர்பு சேவைகள் செயல்திறன் குறிகாட்டி அறிக்கை"
Posted On:
24 APR 2025 3:46PM by PIB Chennai
2024 டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டிற்கான "இந்திய தொலைத்தொடர்பு சேவைகள் செயல்திறன் குறிகாட்டி அறிக்கையை" டிராய் இன்று வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவைகளின் பரந்த கண்ணோட்டத்தை வழங்குகிறது. மேலும், 2024 அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் கேபிள் டிவி, டி.டி.எச் மற்றும் வானொலி, ஒளிபரப்பு சேவைகளின் முக்கிய அளவுருக்கள் மற்றும் வளர்ச்சி போக்குகளை முன்வைக்கிறது.
மொத்த இணைய சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2024 செப்டம்பர் இறுதியில் 971.50 மில்லியனிலிருந்து டிசம்பர் இறுதியில் 970.16 மில்லியனாகக் குறைந்து, காலாண்டு சரிவு விகிதத்தை 0.14% எனப் பதிவு செய்தது. 970.16 மில்லியன் இணைய சந்தாதாரர்களில், கம்பி வழி இணைய சந்தாதாரர்களின் எண்ணிக்கை 41.21 மில்லியன். வயர்லெஸ் இணைய சந்தாதாரர்களின் எண்ணிக்கை 928.96 மில்லியன்.
அகண்ட அலைவரிசை இணைய சந்தாதாரர்களின் எண்ணிக்கை 944.96 மில்லியன். குறுகிய அலைவரிசை இணைய சந்தாதாரர்கள் எண்ணிக்கை 25.20 மில்லியன்.
அகண்ட அலைவரிசை இணைய சந்தாதாரர்களின் எண்ணிக்கை செப்டம்பர் இறுதியில் 944.39 மில்லியனிலிருந்து டிசம்பர் இறுதியில் 944.96 மில்லியனாக 0.06% அதிகரித்துள்ளது. செப்டம்பர் இறுதியில் 27.11 மில்லியனாக இருந்த குறுகிய அலைவரிசை இணைய சந்தாதாரர்களின் எண்ணிக்கை டிசம்பர் இறுதியில் 25.20 மில்லியனாகக் குறைந்தது.
முழுமையான அறிக்கை டிராய் இணையதளத்தில் (www.trai.gov.in மற்றும் http://www trai.gov.in/release-publication/reports/performance-indicators-reports என்ற இணைப்பின் கீழ் கிடைக்கிறது. இந்த அறிக்கை தொடர்பான ஆலோசனைகள் அல்லது விளக்கங்கள் ஏதேனும் இருந்தால், டிராய் ஆலோசகர் (எஃப் & இஏ) திரு விஜயகுமாரை தொலைபேசி +91-20907773 மற்றும் advfea1@trai.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2124056
---
TS/PKV/KPG/DL
(Release ID: 2124147)
Visitor Counter : 14