ஆயுஷ்
உலகளாவிய சுகாதார சமத்துவத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக பாரம்பரிய மருத்துவத்தை முன்னிறுத்துவதற்கான உலக சுகாதார உச்சி மாநாட்டின் பிராந்தியக் கூட்டம் 2025
प्रविष्टि तिथि:
23 APR 2025 5:31PM by PIB Chennai
புதுதில்லியில் 2025 ஏப்ரல் 25 முதல் 27 வரை நடைபெறவுள்ள உலக சுகாதார உச்சி மாநாடு பிராந்தியக் கூட்டம், பாரம்பரிய மருத்துவ முறைகளை ஒருங்கிணைப்பதிலும் அளவிடுவதிலும் சிறப்பு கவனம் செலுத்தி, உலகளாவிய சுகாதார நிகழ்ச்சி நிரலை வடிவமைப்பதற்கான ஒரு முக்கிய தளத்தை வழங்க உள்ளது. உச்சிமாநாட்டின் சிறப்பம்சங்களில், "சமநிலையை மீட்டெடுத்தல்: உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கான பாரம்பரிய மருத்துவத்திற்கான அணுகலை அளவிடுதல்" என்ற தலைப்பில் ஓர் அமர்வு உள்ளது. இது உலகளாவிய பாரம்பரிய மருத்துவத் துறைக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "பாரம்பரிய மருத்துவம் குறித்த உலகளாவிய உரையாடலை முன்னெடுத்துச் செல்ல உலக சுகாதார உச்சிமாநாட்டின் பிராந்திய கூட்டம் சரியான நேரத்தில் கிடைத்துள்ள ஒரு வாய்ப்பாகும் என்று மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு பிரதாப்ராவ் ஜாதவ் இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தைச் சுட்டிக் காட்டி உள்ளார். இந்த அமர்வு முழுமையான ஆரோக்கியம் நோக்கி வளர்ந்து வரும் உலகளாவிய ஆர்வத்தைப் பிரதிபலிக்கிறது. உலக சுகாதார அமைப்பின் 2-ஆவது சர்வதேச பாரம்பரிய மருத்துவ உச்சி மாநாட்டிற்கு நாம் தயாராகி வரும் நிலையில், உலகளாவிய நல்வாழ்வுக்கான தனது உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.
அமைச்சர்கள், முன்னணி விஞ்ஞானிகள், தலைமை நிர்வாக அதிகாரிகள், ஐ.நா அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக பங்குதாரர்களை ஒன்றிணைத்து, “சுகாதார சமத்துவத்தை உறுதிப்படுத்தும் அணுகலை அளவிடுதல்" என்ற கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உலக சுகாதார உச்சிமாநாட்டின் பிராந்திய கூட்டம், அனைவருக்கும் ஆரோக்கியத்தை அடைவதற்கான புதுமையான, அனைவரையும் உள்ளடக்கிய, நிலையான பாதைகளை ஆராயும். பாரம்பரிய மருத்துவம் குறித்த அர்ப்பணிப்பு அமர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இந்த அமர்வானது பண்டைய ஞானத்தில் வேரூன்றிய முழுமையான சுகாதார அமைப்புகள் எவ்வாறு தனிநபரை மையமாகக் கொண்ட சுகாதார பராமரிப்பில் வளர்ந்து வரும் உலகளாவிய தேவையை பூர்த்தி செய்வதற்கும் சுகாதார சமத்துவத்திற்கு பங்களிப்பதற்கும் உதவும் என்பதை ஆராயும். தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், சான்றுகள் அடிப்படையிலான ஆராய்ச்சி மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள பாரம்பரிய மருத்துவ நடைமுறைகளுக்கு உலகளாவிய அணுகலை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை நிபுணர்கள் ஆராய்வார்கள். 2025 டிசம்பர் 2 முதல் 4 வரை புதுதில்லியில் நடைபெறவுள்ள 2வது உலக சுகாதார நிறுவன பாரம்பரிய மருத்துவ உலகளாவிய உச்சி மாநாட்டிற்கு முன்னதாக இந்த அமர்வு பொருத்தமானதாக இருக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2123865
***
TS/SMB/AG/DL
(रिलीज़ आईडी: 2123921)
आगंतुक पटल : 48