அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

எரிசக்தித் துறையின் எதிர்காலம் தொடர்பான சர்வதேச மாநாடு டேராடூனில் தொடங்கியது

Posted On: 23 APR 2025 6:21PM by PIB Chennai

டேராடூனில் உள்ள இந்திய தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலின் பெட்ரோலிய நிறுவனத்தில் (சி.எஸ்.ஐ.ஆர்-இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியம்), "எரிசக்தி எதிர்காலத்தை வடிவமைத்தல்: சவால்கள் மற்றும் வாய்ப்புகள்"  என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு இன்று (23.04.2025) தொடங்கியது. 25.04.2025 வரை 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் புதுமையான எரிசக்தித் தீர்வுகள் குறித்து விவாதங்களை நடைபெறுகிறது.

"2017-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 7-வது ஆண்டாக இந்த மாநாடு நடத்தப்படுகிறது. "மலிவு விலையில் எரிசக்தி மற்றும் ரசாயனங்களுடன்  நிலையான எதிர்காலத்தை ஊக்குவித்தல்" என்ற கருப்பொருளுடன் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச வல்லுநர்கள்இளம் விஞ்ஞானிகள்பல்கலைக்கழகங்கள்ஆராய்ச்சி நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொழில்துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரின் உரைகள் இடம்பெறும்.

இந்த மாநாட்டில் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

***

(Release ID: 2123894)
TS/PLM/RR/DL

 

 
 
 

(Release ID: 2123920) Visitor Counter : 19
Read this release in: Hindi , English , Urdu