அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
குறைந்த செலவில் எளிதாக கிடைக்கக்கூடிய வகையில் அதிக எண்ணிக்கையில் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் : டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
23 APR 2025 5:13PM by PIB Chennai
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமையில், இந்தியாவில் கருப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனைக்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஹெச்பிவி வைரஸ் பரிசோதனைக் கருவிகளின் செயல்பாட்டை ஆய்வு செய்வது குறித்து புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் உயிரி தொழில்நுட்பத் துறை, உயிரி தொழில்நுட்ப தொழில் ஆராய்ச்சி உதவிக்குழுமம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் போன்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டம் இன்று நடைபெற்றது. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உயிரி தொழில்நுட்பத் துறையானது நோய்தடுப்பு தொடர்பான சுகாதாரப் பராமரிப்பில் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
நோய்த் தடுப்பு சுகாதாரப் பராமரிப்பில் உலகின் முன்னணி நாடாக இந்தியாவை உருவெடுக்கச் செய்வதை இலக்காகக் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். டிபிடி மற்றும் பி.ஐ.ஆர்.ஏ.சி குழுவால் நிறைவேற்றப்பட்ட தொடர்ச்சியான குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கான சரியான தருணம் இது என்றும அமைச்சர் கூறினார். முதல் டி.என்.ஏ தடுப்பூசியின் செயல்பாடுகள் சர்வதேச அளவில் இந்தியாவிற்கு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது என்றும், இது சுகாதாரத் துறையில் நாட்டின் அறிவியல் துறைக்கு கிடைத்த மரியாதையாகும் என்று குறிப்பிட்டார்.
"டி.என்.ஏ தடுப்பூசி இந்தியாவை நோய்தடுப்பு சுகாதார நடவடிக்கைகளில் முன்னணி நாடாக உருவெடுக்கச் செய்துள்ளதாக அவர் கூறினார்.
இந்த ஆய்வுக்கூட்டம் தொடங்குவதற்கு முன்பு, பஹல்காமில் நேற்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இரண்டு நிமிட மௌனம் அனுசரிக்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலும், அனுதாபமும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணலாம் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2123856
***
TS/SV/RJ/DL
(Release ID: 2123915)
Visitor Counter : 17