புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
தேசிய சூரியசக்தி நிறுவனத்தின் புதிய போட்டோ வோல்டிக் ஆய்வகம் சூரியப் பரிசோதனைத் திறன்களில் உலகளாவிய வரையறைகளை உருவாக்கியுள்ளது: மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி
Posted On:
22 APR 2025 5:13PM by PIB Chennai
இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன்களில் ஒரு பெரிய முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில், ஹரியானாவின் பந்த்வாரியில் உள்ள குவால் பஹாரியில் உள்ள தேசிய சூரியசக்தி நிறுவனத்தில் (என்ஐஎஸ்இ) போட்டோ வோல்டிக் சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகத்தை மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், புதிய ஆய்வகம் சூரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, சோதனை, பயிற்சி மற்றும் கொள்கை ஆதரவு ஆகியவற்றில் உலகளாவிய வரையறைகளை உருவிக்கும் என்றும், அதே நேரத்தில் தற்சார்பு, கண்டுபிடிப்பு மற்றும் உலகளாவிய சிறப்பை நோக்கி ஒரு துணிச்சலான நடவடிக்கையை இது குறிக்கும் என்றும் கூறினார்.
விரிவான சோதனை, அளவுத்திருத்தம் மற்றும் சான்றிதழ் சேவைகளை வழங்க குறிப்பாக தற்போது நிறுவப்பட்ட தரநிலைகள் ஏதும் இல்லாத ஒளிமின்னழுத்த தொகுதிகள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கு என்ஐஎஸ்இ தற்போது தரநிலைகளுடன் தயாராக உள்ளது என்றும் திரு ஜோஷி கூறினார். இந்த ஆய்வகம் இந்தியாவுக்கு ஒரு முன்னோடி வசதி என்று குறிப்பிட்ட அவர், இந்த ஆய்வகம் மிக உயர்ந்த தரத்தை பூர்த்தி செய்வதை உறுதி செய்யும் என்றார். இந்த ஆய்வகம் பிஐஎஸ் தரநிலைகளுடன் ஒத்துப்போகிறது என்றும், உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்திற்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்றும், உலகளாவிய உற்பத்தி மையமாக மாறுவதற்கான இந்தியாவின் விருப்பத்திற்கு ஆதரவளிக்கும் என்றும் திரு ஜோஷி குறிப்பிட்டார்.
55,000 க்கும் மேற்பட்ட சூர்யமித்ரா தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பயிற்சி அளித்ததிலும், லேவில் 300 க்கும் மேற்பட்ட சூரிய ஏர் டிரையர் மற்றும் விண்வெளி வெப்பமூட்டும் அமைப்புகளை நிறுவியதிலும் என்ஐஎஸ்இ மேற்கொண்ட முயற்சிகளை அவர் பாராட்டினார். இதுபோன்ற முயற்சிகள் தொழில்நுட்பத் திறனை வலுப்படுத்துவதுடன், அரசு, தொழில்துறை மற்றும் கல்வியாளர்களிடையே ஒத்துழைப்பை வளர்க்கும் என்றும் அவர் கூறினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் அதிவேக வளர்ச்சியை எடுத்துரைத்த அமைச்சர், 2014-ல் 2.82 ஜிகாவாட்டாக இருந்த இந்தியாவின் சூரியசக்தி நிறுவுதிறன் தற்போது 106 ஜிகாவாட்டை தாண்டியுள்ளது என்றும், இது 3700 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைக் குறிக்கிறது என்றும் கூறினார். உற்பத்தியைப் பொறுத்தவரை, 2014 ஆம் ஆண்டில் 2 ஜிகாவாட்டாக இருந்த சூரிய மின்சக்தி உற்பத்தி இன்று 80 ஜிகாவாட்டாக அதிகரித்துள்ளது. 2030 க்குள் 150 ஜிகாவாட்டை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சூரியசக்தி முன்னேற்றத்துடன், காற்றாலை மின் உற்பத்தித் திறனில் 50 ஜிகாவாட் என்ற சாதனையையும் அமைச்சர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2123490
***
TS/SMB/AG/DL
(Release ID: 2123563)
Visitor Counter : 30