நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரி அமைச்சகம் ரயில்-கடல்-ரயில் முறையிலான நீடித்த நிலக்கரி போக்குவரத்து குறித்து பங்குதாரர்களுடன் ஆலோசனை நடத்தியது
प्रविष्टि तिथि:
22 APR 2025 4:59PM by PIB Chennai
ரயில்-கடல்-ரயில் (ஆர்.எஸ்.ஆர்) முறையிலான நீடித்த நிலக்கரி போக்குவரத்துக்கான வாய்ப்புகளை ஆராய்தல் என்பது குறித்த பங்குதாரர்கள் ஆலோசனைக் கூட்டத்தை நிலக்கரி அமைச்சகம் புதுதில்லியில் இன்று நடத்தியது. மிகவும் திறமையான, நெகிழ்திறன் மற்றும் நிலையான எதிர்காலத்திற்காக பல்வகை போக்குவரத்தை ஊக்குவிப்பதற்காக நிலக்கரி தளவாட மதிப்புச் சங்கிலியில் உள்ள முக்கிய நிறுவனங்களிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குவதை இந்த ஆலோசனைக் கூட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இக்கூட்டத்தில் தலைமை உரையாற்றிய நிலக்கரி அமைச்சகச் செயலாளர் திரு விக்ரம் தேவ் தத், ஆர்.எஸ்.ஆர் முறை ஒரு தொலைநோக்கு முயற்சி என்று குறிப்பிட்டார். இது போக்குவரத்து செயல்திறனை மேம்படுத்துதல், எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை ஊக்குவித்தல் ஆகிய நாட்டின் பரந்த இலக்குகளுடன் ஒத்துப்போகிறது என்று அவர் கூறினார். ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்தை ஒருங்கிணைக்கும் ஆர்.எஸ்.ஆர் போக்குவரத்து, ஒரு பொருளாதார மாற்று மட்டுமல்ல, குறைந்த கரியமில வாயு வெளியேற்றம் காரணமாக கணிசமாக சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். தொலைதூர நுகர்வு மையங்களில், குறிப்பாக தெற்கு மற்றும் மேற்கு இந்தியாவில் அதிகரித்து வரும் நிலக்கரி தேவையைப் பூர்த்தி செய்ய புதுமையான, பசுமையான மற்றும் அதிக நெகிழ்திறன் கொண்ட பன்முக போக்குவரத்து முறைகளை ஏற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை திரு தத் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2123476
-----
TS/IR/KPG/KR
(रिलीज़ आईडी: 2123503)
आगंतुक पटल : 38