வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
2025 மார்ச் மாதத்திற்கு 8 முக்கிய தொழில் துறைகளின் குறியீட்டு எண் (அடிப்படை ஆண்டு: 2011-12=100)
Posted On:
21 APR 2025 5:00PM by PIB Chennai
2024 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2025 மார்ச் மாதத்தில் 8 முக்கிய தொழில் துறைகளின் ஒருங்கிணைந்த குறியீட்டு எண் 3.8 சதவீதம் (தோராயமாக) அதிகரித்துள்ளது. 2025 மார்ச் மாதத்தில் சிமெண்ட், உரங்கள், எஃகு, மின்சாரம், நிலக்கரி, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் பொருட்களின் உற்பத்தி, ஆக்கப்பூர்வமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
2024 டிசம்பர் மாதத்தில் 8 முக்கிய தொழில் துறைகளின் குறியீட்டு வளர்ச்சி விகிதம் 5.1 சதவீதமாக இருந்தது. 2024-25 நிதியாண்டில் ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான காலத்தில் இந்த வளர்ச்சி விகிதம் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4.4 சதவீதமாக (தோராயமாக) இருந்தது.
2025 மார்ச் மாதத்தில் 8 முக்கிய தொழில் துறைகளின் குறியீட்டு எண் விவரம்:
நிலக்கரி உற்பத்தி 2024 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 1.6 சதவீதம் அதிகரித்திருந்தது. 2024-25 நிதியாண்டில் ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான காலத்தில் மொத்த குறியீட்டு எண் 5.1 சதவீத அளவுக்கு அதிகரித்திருந்தது.
கச்சா எண்ணெய் உற்பத்தி 2024 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 1.9 சதவீதம் அதிகரித்திருந்தது. 2024-25 நிதியாண்டில் ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான காலத்தில் மொத்த குறியீட்டு எண் 2.2 சதவீத அளவுக்கு குறைந்திருந்தது.
இயற்கை எரிவாயு உற்பத்தி 2024 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 12.7 சதவீதம் குறைந்திருந்தது. 2024-25 நிதியாண்டில் ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான காலத்தில் மொத்த குறியீட்டு எண் 1.2 சதவீத அளவுக்கு குறைந்திருந்தது.
பெட்ரோலிய சுத்திகரிப்புப் பொருட்கள் உற்பத்தி 2024 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 0.2 சதவீதம் அதிகரித்திருந்தது. 2024-25 நிதியாண்டில் ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான காலத்தில் மொத்த குறியீட்டு எண் 2.8 சதவீத அளவுக்கு அதிகரித்திருந்தது.
உரங்கள் உற்பத்தி 2024 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 8.8 சதவீதம் அதிகரித்திருந்தது. 2024-25 நிதியாண்டில் ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான காலத்தில் மொத்த குறியீடு 2.9 சதவீத அளவுக்கு அதிகரித்திருந்தது.
எஃகு உற்பத்தி 2024 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 7.1 சதவீதம் அதிகரித்திருந்தது. 2024-25 நிதியாண்டில் ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான காலத்தில் மொத்த குறியீட்டு எண் 6.7 சதவீத அளவுக்கு அதிகரித்திருந்தது.
சிமெண்ட் உற்பத்தி 2024 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 11.6 சதவீதம் அதிகரித்திருந்தது. 2024-25 நிதியாண்டில் ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான காலத்தில் மொத்த குறியீட்டு எண் 6.3 சதவீத அளவுக்கு அதிகரித்திருந்தது.
மின்சார உற்பத்தி 2024 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 6.2 சதவீதம் அதிகரித்திருந்தது. 2024-25 நிதியாண்டில் ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான காலத்தில் மொத்த குறியீட்டு எண் 5.1 சதவீத அளவுக்கு அதிகரித்திருந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2123185
***
TS/SMB/RR/KR
(Release ID: 2123255)
Visitor Counter : 13