தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்: அகண்ட அலைவரிசை சந்தாதாரர்கள் எண்ணிக்கையின் மாதாந்தர வளர்ச்சி விகிதம் 0.04 சதவீதமாக உள்ளது

Posted On: 21 APR 2025 2:57PM by PIB Chennai

தொலைத்தொடர்பு சேவைகளை இயக்குவோரின் எண்ணிக்கை 2024 டிசம்பர் மாதத்தில் 1192 ஆக இருந்தது. 2025 ஜனவரியில் இந்த எண்ணிக்கை 1180 ஆக இருந்தது. இவர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின்படி 2024 டிசம்பர் மாதத்தில் 944.96 மில்லியனாக இருந்த அகண்ட அலைவரிசை சந்தாதாரர்கள் எண்ணிக்கை 2025 ஜனவரி இறுதியில் 945.16 மில்லியனாக இருந்தது. இதன் மாதாந்தர வளர்ச்சி விகிதம் 0.04 சதவீதமாகும் என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

2025 ஜனவரி 31 நிலவரப்படி தொலைத்தொடர்பு சந்தாக்களில் கம்பியில்லா அகண்ட அலைவரிசை சந்தாதாரர்களின் எண்ணிக்கை 904.02 மில்லியனாக இருந்தது.

மொத்த தொலைபேசி சந்தாதாரர்கள் எண்ணிக்கை 1157.00 மில்லியனாக இருந்தது. இதன் மாதாந்தர வளர்ச்சி விகிதம் 0.55 சதவீதமாகும். இதில் நகர்ப்புற கம்பியில்லா தொலைபேசி சந்தாதாரர்கள் எண்ணிக்கை 631.60 மில்லியனாக இருந்தது. இதன் மாதாந்தர வளர்ச்சி விகிதம் 0.82 சதவீதமாகும்.

ஊரக கம்பியில்லா தொலைபேசி சந்தாதாரர்கள் எண்ணிக்கை 525.41 மில்லியனாக இருந்தது. இதன் மாதாந்தர வளர்ச்சி விகிதம் 0.23 சதவீதமாகும்.

2025 ஜனவரி 31 நிலவரப்படி அகண்ட அலைவரிசை (கம்பிவழி + கம்பியில்லா) சேவை வழங்கும் 5 முதன்மை நிறுவனங்களின் சந்தாதாரர்கள் எண்ணிக்கை விவரம்:

1.    ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம் – 476.58 மில்லியன் (2024 நவம்பர் தரவின்படி)

2.    பார்தி ஏர்டெல் நிறுவனம் – 289.31 மில்லியன் (2024 நவம்பர் தரவின்படி)

3.    வோடபோன் ஐடியா நிறுவனம் – 126.41 மில்லியன்

4.    பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனம் – 35.77 மில்லியன்

5.    ஆட்ரியா கன்வெர்ஜென்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் – 2.28 மில்லியன்

2025 ஜனவரி 31 நிலவரப்படி நாடு முழுவதும் தொலைபேசி இணைப்பு அடர்த்தி சதவிகிதம் 84.54 உள்ள நிலையில் தமிழ்நாட்டில்  101.96 சதவீதமாக உள்ளது. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் -  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2123143

 

 

***

(Release ID: 2123143)
TS/SMB/RR/KR

 


(Release ID: 2123196) Visitor Counter : 12
Read this release in: English , Urdu , Hindi