தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு 2025 பிப்ரவரியில் 16.10 லட்சம் நிகர உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது

Posted On: 21 APR 2025 2:26PM by PIB Chennai

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 2025 பிப்ரவரி மாதத்திற்கான தற்காலிக சம்பளப் பட்டியல் தரவை வெளியிட்டுள்ளது. இது 16.10 லட்சம் உறுப்பினர்களின் நிகர சேர்க்கையைக் குறிப்பிடுகிறது. 2024 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது நிகர சம்பளப் பட்டியலில் பெயர் சேர்த்தல்களில் 3.99% வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 2025 பிப்ரவரி மாதத்தில் சுமார் 7.39 லட்சம் புதிய சந்தாதாரர்களைச் சேர்த்துள்ளது. புதிய சந்தாதாரர்களின் இந்த சேர்க்கைக்கு, அதிகரித்து வரும் வேலை வாய்ப்புகள், பணியாளர் நலன்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் வெற்றிகரமான மக்கள் தொடர்பு திட்டங்கள் ஆகியவை காரணமாக இருக்கலாம்.

18-25 வயதுப் பிரிவினரில் 4.27 லட்சம் புதிய சந்தாதாரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர், இது 2025 பிப்ரவரி மாதத்தில் சேர்க்கப்பட்ட மொத்த புதிய சந்தாதாரர்களில் 57.71% ஆகும். இதில் பெரும்பாலான நபர்கள் இளைஞர்கள் மற்றும் முதன்மையாக முதல் முறையாக வேலை தேடுபவர்கள் என்பதைக் குறிக்கிறது.

மேலும், 2025 பிப்ரவரி மாதத்தில் 18-25 வயதுப் பிரிவினரில்  நிகர கூடுதல் சம்பளப் பட்டியல் எண்ணிக்கை சுமார் 6.78 லட்சம் ஆகும், இது 2024  பிப்ரவரி மாதத்தை விட 3.01% அதிகமாகும்.

முன்னதாக வெளியேறிய சுமார் 13.18 லட்சம் உறுப்பினர்கள் 2025 பிப்ரவரி மாதத்தில் மீண்டும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் இணைந்தனர்.

2025 பிப்ரவரி மாதத்தில் சுமார் 2.08 லட்சம் புதிய பெண் சந்தாதாரர்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் இணைந்தனர். இது 2024 பிப்ரவரி மாதத்துடன்  ஒப்பிடும்போது 1.26 சதவீதம் அதிகமாகும்.

***

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2123129

TS/IR/LDN/KR


(Release ID: 2123153) Visitor Counter : 21