பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
கத்துவாவில் முதல் நகராட்சி கார் நிறுத்த வளாகம் - மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் திரு உமர் அப்துல்லா இணைந்து திறந்து வைத்தனர்
प्रविष्टि तिथि:
19 APR 2025 5:11PM by PIB Chennai
ஜம்மு-காஷ்மீரில் நகர்ப்புற உள்கட்டமைப்புக்கான குறிப்பிடத்தக்க மேம்பாடாக, மத்திய பணியாளர் நலன், பொது மக்கள் குறைதீர்ப்பு, அறிவியல், தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கும், ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் திரு ஒமர் அப்துல்லாவும் இணைந்து இன்று (19.04.2025) கத்துவா நகரில் முதலாவது நகராட்சி வாகன நிறுத்த வளாகத்தைத் திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், கத்துவா விரைவான வளர்ச்சியை அடைவதாக கூறினார். ஒரு காலத்தில் தனிப்பட்ட வாகனங்கள் இல்லாத அல்லது மிக குறைவாக இருந்த ஒரு நகரத்தில் இப்போது கட்டமைக்கப்பட்ட கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படுவது வளர்ச்சியை எடுத்துக் காட்டுகிறது என்று அவர் தெரிவித்தார். முழு நகரத்திலும் மூன்று கார்கள் மட்டுமே காணப்பட்ட ஒரு காலம் இருந்தது என அவர் கூறினார்.
முதலமைச்சர் திரு ஒமர் அப்துல்லா பேசுகையில், டாக்டர் ஜிதேந்திர சிங்கின் செயல்பாடுகளுக்குப் பாராட்டுத் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் ஜம்மு-காஷ்மீரை வளர்ச்சி அடையச் செய்வதற்கான ஜம்மூ காஷ்மீர் யூனியன் பிரதேச அரசும் மத்திய அரசும் இணைந்து செயல்படுவதாக திரு ஜிதேந்திர சிங் கூறினார்.
*****
(Release ID: 2122912)
PLM/SG
(रिलीज़ आईडी: 2122922)
आगंतुक पटल : 62