புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
சமீபத்திய ஆய்வு முடிவுகள், பேரியல் பொருளாதார குறியீடுகளில் முக்கிய முன்முயற்சிகள் குறித்து ஆலோசிக்க தரவுப் பயனர்கள் மாநாடு: தேசிய புள்ளியியல் அலுவலகம் மும்பையில் நடத்துகிறது
Posted On:
19 APR 2025 11:12AM by PIB Chennai
மத்திய அரசின் புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் தரவு பயனர்கள், சம்பந்தப்பட்ட பிற தரப்பினருடன் இணைந்து தரவு பயனர்கள் மாநாட்டை 21 ஏப்ரல் 2025 அன்று நடத்துகிறது.
வேலைவாய்ப்பு, வேலையின்மை, நுகர்வு, செலவினம், தொழில்துறை புள்ளிவிவரங்கள் போன்ற முக்கியமான பகுதிகளில் முக்கிய பொருளாதார குறிகாட்டிகளை அறிந்து கொண்டு தரவுகளை உருவாக்க பெரிய அளவிலான மாதிரி கணக்கெடுப்புகளை புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் நடத்துகிறது. இது தேசிய கணக்குகள், விலை குறியீடுகள் உள்ளிட்ட அத்தியாவசிய பேரியல் பொருளாதார குறிகாட்டிகளையும் உருவாக்குகிறது. இந்த தரவுத் தொகுப்புகள் இந்தியாவில் ஆதார அடிப்படையிலான கொள்கை உருவாக்கத்துக்கும் பயனுள்ள ஆளுகைக்கும் அடித்தளமாக அமைகின்றன.
தரவு தயாரிப்பாளர்கள், தரவு பயனர்களுக்கு இடையிலான உரையாடலை ஊக்குவிப்பதற்கும், அறிவு பரிமாற்றத்தை வளர்ப்பதற்கும், துறையில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த விவாதங்களை வளர்ப்பதற்கும் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
*கணக்கெடுப்புகளில் பின்பற்றப்படும் மாதிரி முறைகள்
*குடும்ப நுகர்வு செலவு கணக்கெடுப்பின் சமீபத்திய முடிவுகளுக்கான நுண்ணறிவு
*அவ்வப்போதைய தொழிலாளர் கணக்கெடுப்பில் சமீபத்திய மாற்றங்கள்
*மொத்த உள்நாட்டு உற்பத்தியை தொகுத்தல், அடிப்படை திருத்தம் போன்றவற்றில் இந்த மாநாடு முக்கிய கவனம் செலுத்தும். புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் சௌரப் கார்க், இந்த தரவு பயனர்கள் மாநாட்டிற்கு தலைமை வகிப்பார். பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினரும், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவருமான டாக்டர் நீல்காந்த் மிஸ்ரா, உள்ளிட்டோர் இதில் பங்கேற்று தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்.
இந்த நிகழ்வில் ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், பொருளாதார வல்லுநர்கள், தொழில்துறை சங்கங்கள், கொள்கை வகுப்பாளர்கள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், தனியார் கணக்கெடுப்பு முகவர்கள், ஊடக நிறுவனங்கள் உட்பட சுமார் 250 பங்கேற்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.
****
(Release ID: 2122834)
PLM/SG
(Release ID: 2122861)
Visitor Counter : 30