திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் புத்தொழில் நிகழ்ச்சியான 'ஜிடெக்ஸ் ஆப்பிரிக்கா 2025'-ல் இந்தியா பங்கேற்றது

Posted On: 18 APR 2025 10:35AM by PIB Chennai

ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் புத்தொழில் நிகழ்ச்சியான  ஜிடெக்ஸ் (GITEX) என்பது கொள்கை உருவாக்கத் தலைவர்கள், மாற்றத்தை உருவாக்குபவர்கள், தொலைநோக்கு பார்வை கொண்டவர்கள் ஆகியோர் இணைந்து கூட்டாக விவாதிப்பதற்கும் வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கவும் ஒரு தளத்தை வழங்குகிறது. மொராக்கோ தலைநகர் மராகேஷில் இந்த மூன்று நாள் நிகழ்வு சமீபத்தில் நிறைவடைந்தது.

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர்  இணையமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி  இந்த மாநாட்டில் இந்தியப் பிரதிநிதியாக கலந்து கொண்டார். உயர்மட்ட இருதரப்பு கூட்டங்கள், குழு விவாதங்களில் பங்கேற்ற அவர், இந்திய புத்தொழில் நிறுவனங்கள் குறித்து விளக்கினார்.

இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை, செயற்கை நுண்ணறிவு, இணைய பாதுகாப்பு, நிதி்தொழில்நுட்பம் போன்றவற்றில் ஆப்பிரிக்க நாடுகளுடன் ஒத்துழைத்து செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.

***

 

(Release ID: 2122606)

SV/PLM/RJ


(Release ID: 2122662) Visitor Counter : 31