நிதி அமைச்சகம்
மேம்பட்ட ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய நிதிப் புலனாய்வு பிரிவு –இந்திய ரிசர்வ் வங்கி கையெழுத்து
Posted On:
17 APR 2025 6:14PM by PIB Chennai
பணமோசடி தடுப்புச் சட்டம் மற்றும் அதன் கீழ் வகுக்கப்பட்டுள்ள விதிகளின் தேவைகளைத் திறம்பட அமல்படுத்துவதற்கான தொடர்ச்சியான ஒருங்கிணைந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்திய நிதிப் புலனாய்வு பிரிவு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி புதுதில்லியில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய நிதிப் புலனாய்வு பிரிவு இயக்குநர் திரு விவேக் அகர்வால் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறைத் துறையின் நிர்வாக இயக்குநர். திரு ஆர்.எல்.கே. ராவ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய நிதிப் புலனாய்வு பிரிவு ஆகியவை பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பை வழங்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2122496
***
TS/GK/SG/DL
(Release ID: 2122523)