பாதுகாப்பு அமைச்சகம்
உலக சுகாதார தினத்தை இராணுவ மருத்துவமனையின்செவிலியர் கல்லூரி, கொண்டாடுகிறது
प्रविष्टि तिथि:
17 APR 2025 4:41PM by PIB Chennai
உலக சுகாதார தினத்தை புதுதில்லியில் உள்ள இராணுவ மருத்துவமனையின் செவிலியர் கல்லூரி விமரிசையாகக் கொண்டாடியது. தாய் சேய் நலனை வலியுறுத்தும் 'ஆரோக்கியமான தொடக்கம், நம்பிக்கையான எதிர்காலம்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செவிலியர் கல்லூரியின் முதல் பெண்மணி திருமதி நவ்னீத் நாத் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நீரிழிவு, இதய, சிறுநீரக நோயாளிகளுக்கு உணவு, பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய உணவுகள் உட்பட ஊட்டச்சத்து, சிகிச்சை முறைகள், ஆரோக்கியமான உணவு வகைகள், ஆறு மாதம் முதல் ஒரு வயது வரையிலான பச்சிளங் குழந்தைகளுக்கான உணவு ஆகியவை குறித்த பயிற்சி வழங்கப்பட்டன. இது தொடர்பான விளக்கக் காட்சிகளும் காட்சிப்படுத்தப்பட்டன.
2025-ம் ஆண்டில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, மாணவர்கள் சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினர். இந்த நிகழ்ச்சி மாணவர்கள் மற்றும் சமூகத்தினரிடையே சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு, கல்வி மற்றும் நல்ல பழக்கவழக்கங்களை ஊக்குவிப்பதுடன் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான முக்கியத்துவத்தையும் உணர்த்துவதாக அமைந்தது.
-----
(Release ID: 2122438)
TS/SV/KPG/KR
(रिलीज़ आईडी: 2122483)
आगंतुक पटल : 33