குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புவனேஸ்வரில் உள்ள மத்திய சாதனங்கள் மற்றும் பயிற்சி மையத்தை மத்திய அமைச்சர் திரு ஜிதன் ராம் மஞ்சி பார்வையிட்டார்

இடுகை இடப்பட்ட நாள்: 17 APR 2025 4:02PM by PIB Chennai

மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள்  அமைச்சர் திரு. ஜிதன் ராம் மஞ்சிதமது அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான புவனேஸ்வரில் உள்ள மத்திய சாதனங்கள் மற்றும் பயிற்சி மையத்தை(சி.டி.ஆர்.டி.சி.) பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து, புவனேஸ்வரில் உள்ள மஞ்சேஸ்வர் தொழிற்பேட்டையில் உள்ள மருந்து தொழில் மையத்தையும் அவர் பார்வையிட்டார்.

அமைச்சரின் இந்தப் பயணத்தின்போது, சிடிஆர்டிசி-யின் முக்கிய முன்முயற்சிகள், குறிப்பிடத்தக்க சாதனைகள் குறித்து அமைச்சர் திரு மஞ்சிக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் மற்றும் பயிற்சித் திட்டங்களை ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் இளம் பயிற்சியாளர்களுடன்  கலந்துரையாடினார்.

 

***

(Release ID: 2122412)
TS/PLM/RR/KR

 

 


(வெளியீட்டு அடையாள எண்: 2122463) வருகையாளர் எண்ணிக்கை : 34
இந்த வெளியீட்டை படிக்க: Odia , English , Urdu , हिन्दी