அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் நாட்டின் சிறு ஆயுத உற்பத்தி சூழல்சார் அமைப்பை வலுப்படுத்துகிறது
Posted On:
17 APR 2025 2:45PM by PIB Chennai
மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியமானது ஹைதராபாதில் உள்ள திவிபா டிஃபன்ஸ் இந்தியா பிரைவேட் நிறுவனத்திற்கு நிதியுதவி அளிப்பதன் மூலம் நாட்டின் சிறு ஆயுத உற்பத்தித் திறனை உள்நாட்டு மயமாக்குவதற்கான முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. "7.62 மிமீ x 51 மிமீ ரக துப்பாக்கிகளை மேம்படுத்தி வர்த்தக பயன்பாட்டிற்குக் கொண்டு வருதல் " என்ற பெயரிலான செயல் திட்டமானது ராணுவத்தின் தேவைகளுக்கு ஏற்ப உயர் செயல்திறனுடன் கூடிய துப்பாக்கிகளை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒருங்கிணைந்த தர உத்தரவாதம், சோதனை உள்கட்டமைப்புடன் கூடிய அதிநவீன உற்பத்திப் பிரிவை உருவாக்குவதன் மூலம், இந்த ரக துப்பாக்கிகளின் வடிவமைப்பை மேம்படுத்தி வர்த்தக மயமாக்கும் நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் முக்கியப் பங்கு வகிக்கும்.
பல தசாப்தங்களாக, சிறிய ஆயுதங்களை கொள்முதல் செய்வதற்கு வெளிநாடுகளைச் சார்ந்திருக்கும் நிலை இருந்து வந்தது. இதன் விளைவாக கணிசமான அந்நிய செலாவணி தேவைப்பட்டதுடன் ஆயுதப்படைகளிடையே ஆயுதங்களின் செயல் திறன் குறித்த சவால்களும் எழுந்தன. இதனால் ஐஎன்எஸ்ஏஎஸ் ரக துப்பாக்கிகள், நவீன போர் தேவைகளுக்கு போதுமானதாக இல்லை என்பதால் 2017-ம் ஆண்டில், 7.62 மிமீ x 51 மிமீ அளவு கொண்ட மேம்பட்ட, நம்பகமான துப்பாக்கிகளை தயாரிப்பதற்கான கொள்கையை மத்திய அரசு வகுத்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2122388
****
TS/SV/KPG/KR
(Release ID: 2122424)
Visitor Counter : 42